டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா? - ராகுல்காந்தி சொன்ன பதில் இதுதான்!

Google Oneindia Tamil News

டெல்லி: தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதிலளித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் பாஜக எதிர்பார்த்ததைவிடவும் அதிக இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. தனது கோட்டை என மார் தட்டிவந்த தொகுதிகளிலும் காங்கிரஸ் படுதோல்வியடைந்துள்ளது.

ஒரே ஒரு தொகுதியில் ஆறுதல்.. தேனியில் மட்டும்தான் அதிமுக முன்னிலை.. வேற யார்? ஓபிஆர்தான்! ஒரே ஒரு தொகுதியில் ஆறுதல்.. தேனியில் மட்டும்தான் அதிமுக முன்னிலை.. வேற யார்? ஓபிஆர்தான்!

ராகுல் தோல்வி

ராகுல் தோல்வி

அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கோட்டையான அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்துள்ளார்.

மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்

மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்

இந்நிலையில் ராகுல்காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்.

நாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது? நாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது?

மோடிக்கு வாழ்த்து

மோடிக்கு வாழ்த்து

தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகள். மோடி பிரதமராவதை மதிக்கிறேன். காங்கிரஸ் மீது இதுவரை நம்பிக்கை வைத்தவர்கள் அதை தொடர வேண்டும்.

ஸ்மிருதிக்கு வாழ்த்து

ஸ்மிருதிக்கு வாழ்த்து

அமேதி தொகுதியில் என்னை வீழ்த்திய ஸ்மிருதி இரானிக்கும் வாழ்த்துகள். என் மீது யார் அவதூறு பேசினாலும் நான் தொடர்ந்து அன்பை செலுத்துவேன் என்றார்.

அவர் கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம்.. வாய்ப்பு இனி வராது.. தினகரனை நம்பி ஏமாந்த ஸ்டாலின்!அவர் கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம்.. வாய்ப்பு இனி வராது.. தினகரனை நம்பி ஏமாந்த ஸ்டாலின்!

ராஜினாமா செய்வீர்களா?

ராஜினாமா செய்வீர்களா?

இதைத்தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி நான் பதவியை ராஜினாமா செய்வது குறித்து கட்சியின் காரிய கமிட்டி முடிவெடுக்கும் என்று கூறினார் ராகுல்காந்தி.

English summary
Party will decide whether to resign congress president post said Rahul gandhi in Press meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X