டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏர் இந்தியா விமானம் தாமதம்.. வெகுண்ட பயணிகள்.. விமான ஊழியர்கள் மீது பயணிகள் தாக்குதல்

Google Oneindia Tamil News

டெல்லி: ஏர் இந்தியா விமானம் 5 மணி நேரம் தாமதமானதை அடுத்து அதிலிருந்த பயணிகள் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏர் இந்தியாவின் போயிங் ரக 747 விமானம் டெல்லியிலிருந்து மும்பைக்கு இயக்கப்படுகிறது. இந்த விமானம் வியாழக்கிழமை புறப்படத் தயாரானது. அப்போது அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.

Passengers manhandled crew because of Air India flight delay

உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது 5 மணி நேரமாக விமானம் புறப்படாமல் இருந்ததால் பயணிகள் கொந்தளிப்படைந்தனர்.

இதையடுத்து விமானிகள் அமர்ந்திருக்கும் அறையை பயணிகள் தட்ட ஆரம்பித்தனர். மேலும் அவர்களை வெளியே வருமாறு கத்தி கூச்சலிட்டனர். அப்போது பயணி ஒருவர் வெளியே வராவிட்டால் கதவை உடைத்து விடுவதாக மிரட்டினார்.

Passengers manhandled crew because of Air India flight delay

அது போல் பெண் பயணி ஒருவர் விமான ஊழியரின் கைகளை இழுத்து சென்று உடனடியாக விமானத்தின் கதவை திறந்துவிடுமாறு கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஏர் இந்தியா விமானத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறுகளால் கடந்த வியாழக்கிழமை தாமதமானது.

சிறார் ஆபாச வீடியோ.. பேஸ்புக்கில் பதிவு செய்த அஸ்ஸாம் மாநில இளைஞர் பொள்ளாச்சியில் கைதுசிறார் ஆபாச வீடியோ.. பேஸ்புக்கில் பதிவு செய்த அஸ்ஸாம் மாநில இளைஞர் பொள்ளாச்சியில் கைது

பயணிகளின் செயல்கள் குறித்து விரிவான அறிக்கை கொடுக்குமாறு அந்த விமானத்தின் ஊழியர்களை கேட்டுள்ளோம். அது குறித்த அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வோம் என்றார்.

English summary
Passengers manhandled crew and threatened to break the cockpit door of Air India because of its delay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X