டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எளிமையாக பெறலாம்.. விண்ணப்பித்த 11 நாளில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.. மத்திய அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பாஸ்போர்ட் வழங்குவதற்கான கால அளவு 11 நாளாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பித்த 11 நாளில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்றும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்பி மணீஸ் திவாரி பாஸ்போர்ட் தொடர்பாக கேள்வி எழுப்பி பேசுகையில், "நாட்டில் 36 பாஸ்போட் அலுவலகங்கள், 93 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மற்றும் 412 தபால் அலுவலக் பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் உள்ளது.

Passports Issued Within 11 Days Now: central government

ஆனால் இத்தனை இருந்தும் ஏன் மக்கள் பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கலை சந்திக்கிறார்கள்" என்றார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி முரளீதரன் பதில் அளித்தார். "பாஸ்போர்ட் வழங்குவதற்கான கால அளவானது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 11 நாள்களில் பாஸ்போர்ட்டை பெற முடியும். தட்கலில் விண்ணப்பித்தால் ஒரே நாளில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.

அயோத்தி சமரச குழு ஜூலை 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு! அயோத்தி சமரச குழு ஜூலை 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

விண்ணப்பதாரர்கள் மீதான போலீஸ் விசாரணை பணியானது 731 காவல் மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாமதம் மற்றும் போலீஸ் விசாரணையின் போதான முறைகேடுகள் உள்ளிட்டவை தவிர்க்கப்படும்" என்று தெரிவித்தார்.

English summary
Minister of State for External Affairs V Muraleedharan said Passports Issued Within 11 Days to people Now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X