டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது

Google Oneindia Tamil News

டெல்லி: பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையா உள்ளிட்ட 102 பேருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும். நாளை நாடு முழுவதும் 72ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று பத்ம விருதுகளை மத்தி அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட ஏழு பேருக்குப் பத்ம விபூ,ன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, பி. அனிதா(விளையாட்டு), பாம்பே ஜெயஸ்ரீ(கலை) உள்ளிட்ட 11 பேருக்குப் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சாலமன் பாப்பையா, சுப்பு ஆறுமுகத்துக்கு இப்போதாவது வழங்கப்பட்ட பத்மஶ்ரீ விருது- ரசிகர்கள் மகிழ்ச்சி சாலமன் பாப்பையா, சுப்பு ஆறுமுகத்துக்கு இப்போதாவது வழங்கப்பட்ட பத்மஶ்ரீ விருது- ரசிகர்கள் மகிழ்ச்சி

பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையா (கலை மற்றும் கல்வி)

பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையா (கலை மற்றும் கல்வி)

தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலேயே சாலமன் பாப்பயை தான். பட்டிமன்றம் என்றாலே வயதானவர்களுக்கானது என்று இருந்ததை உடைத்து, தனது தமிழ் ஆளுமை, நகைச்சுவை, டைமிங் ஆகியவற்றால் 2k கிட்ஸையும் பட்டிமன்றம் பார்க்க வைத்த பெருமை சாலமன் பாப்பையாவுக்கே சேரும். ஏறக்குறைய 60 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய துறையில் சேவையாற்றி வரும் இவர், தற்கால சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தமிழகத்தில் எம்ஏ தமிழ் பட்டப்படிப்பு முதல்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதில் படித்த முதல் பேட்ஜ் மாணவர்களில் இவரும் ஒருவர். கடந்த பல ஆண்டுகளாக சமூக சார்ந்த தலைப்புகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களுக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார்.

2 ரூபாய் டாக்டர் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் (மருத்துவம்)

2 ரூபாய் டாக்டர் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் (மருத்துவம்)

வட சென்னை பகுதியில் பல ஆண்டுகளாக இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தவர் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன். சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு மருத்துவ சேவை சென்று சேர வேண்டும் என்பதற்காகக் கடந்த 1973ஆம் ஆண்டு முதல் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வருகிறார். மெரிசல் திரைப்படத்தில் வரும் விஜய் கதாபாத்திரம் இவர் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார்.

சாந்தி கியர்ஸ் பி சுப்பிரமணியன் (சமூக சேவை)

சாந்தி கியர்ஸ் பி சுப்பிரமணியன் (சமூக சேவை)

தற்போது முருகப்பா குழுமத்திலுள்ள சாந்தி கியர்ஸ் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர். சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை முருகப்பா குழுமத்திற்கு விற்றவுடன், சாந்தி சமூக சேவை என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவசமாகக் கல்வியை வழங்கி வருகிறார். கோவையில் இவரது மருத்துவமனை, கேன்டீன், பெட்ரோல் பங்கு ஆகியவற்றைப் பயன்படுத்தாதவர்களைக் காண்பது அரிது. மேலும், தினசரி 300 மூத்த குடிமகன்களுக்கு இலவசமாக உணவுகளையும் வழங்கி வந்தார். இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.

பாப்பம்மாள் (விவசாயி)

பாப்பம்மாள் (விவசாயி)

40 வயதைக் கடந்தாலே நடக்கச் சிரமப்படும் தலைமுறைக்கு மத்தியில் 105 வயதிலும் கெத்தாக விவசாயம் செய்து வருபவர் தான இந்த பாப்பம்மாள். இவர் வேலூர் மாவட்டத்திலுள்ள தேவலபுரம் கிராமத்தில் 1914ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், தாத்தா பாட்டியிடமே வளர்ந்தார். தற்போது கோவை மாவட்டத்தில் வசித்து வரும் இவர், தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் மேற்கொண்டு வருகிறார்.

பாம்பே ஜெயஸ்ரீ (கலை துறை)

பாம்பே ஜெயஸ்ரீ (கலை துறை)

பாம்பே ஜெயஸ்ரீ என்று அழைக்கப்படும் ஜெயஸ்ரீ ராம்நாத், நான்காம் தலைமுறை இசைக் கலைஞர். இவர் பிரபல வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமனிடம் பயிற்சி பெற்றவர். பாம்பே ஜெயஸ்ரீ தனது முதல் இசை நிகழ்ச்சியை 1982 இல் நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து டெல்லி, மும்பை என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினார். இது தவிர இவர், இளையராஜாவின் வியட்நாம் வீடு தொடங்கி சில திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார். முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் பாடியே "நறுமுகையே நறுமுகையே ", "ஒன்றா ரெண்டா ", "வசீகரா" பாடல்கள் இன்னும் பலரது மொபைல் ரீங்டோன்களாக உள்ளன.

பி. அனிதா (விளையாட்டு)

பி. அனிதா (விளையாட்டு)

சென்னையை சேர்ந்த 35 வயதான விளையாட்டு வீரர் அனிதா. நாட்டின் மிகச் சிறந்த கூடைப்பந்து வீராங்கனைகளில் ஒருவரான இவர், நமது தேசிய கூடைப்பந்து அணிக்கு சுமார் எட்டு ஆண்டுகள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்தியா அணியை மிகக் குறைந்த வயதில் வழிநடத்தியவர் என்ற சிறப்பை பெற்றவர். தேசிய அளவில் சுமார் 30க்கும் மேற்பட்ட போட்டிகளில் வென்றவர். மேலும், சர்வதேச அளவில் காமன்வெல்த், ஆசிய போட்டிகள் ஆகியவற்றிலும் இந்தியா சார்பில் கலந்துகொண்டவர்

சுப்பு ஆறுமுகம் (கலை துறை)

சுப்பு ஆறுமுகம் (கலை துறை)

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டில் சிறந்த விளங்கும் நபர்களில் ஒருவர் சுப்பு ஆறுமுகம். இவருக்கு 17 வயதில் நகைச்சுவை நடிகர் என்எஸ் கிருஷ்ணன் வில்லுப்பாட்டை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர், அதில் தேர்ந்த கலைஞராக உருவெடுத்த அவர், வில்லுப்பாட்டை உலகளவில் எடுத்துச் சென்றார். திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் 145 ஆண்டுகளில் முதல்முறையாகத் தனது வில்லிசை மூலம் தமிழை ஒலிக்கச் செய்தார். இவருக்குக் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

கே சி சிவக்குமார் (கலை துறை)

கே சி சிவக்குமார் (கலை துறை)

தமிழ் மொழியில் காமிக்ஸ்களின் தந்தை என்றே இவரைச் சொல்லலாம். தனது வாழ்நாளில் சுமார் 60 ஆண்டுகள் பல கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியவர். அந்த காலத்தில் இவரது சந்தமாமா எனப்படும் அம்புலி மாமா கதைகளைப் படிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அதேபோல புகழ்பெற்ற விக்ரம் வேதா கதைகளையும் இவர் படைத்துள்ளார். இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தனது 97 வயதில் உயிரிழந்தார்.

மராச்சி சுப்புராமன் (சமூக சேவை)

மராச்சி சுப்புராமன் (சமூக சேவை)

71 வயதாகும் மராச்சி சுப்புராமன் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளாகவே பொதுவெளியில் மலம் கழிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் முதலில் 1986ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த Society for Community Organisation and People's Education (SCOPE) என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். 1996 ஆம் ஆண்டில் ஸ்கோப்பின் கவனம் சுகாதாரத் துறையை நோக்கித் திரும்பியது. பொதுவெளியில் மலம் கழிப்பது குறித்தும், கழிப்பறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.

ஸ்ரீதர் வேம்பு (தொழிற்துறை)

ஸ்ரீதர் வேம்பு (தொழிற்துறை)

தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ஸ்ரீதர் வேம்பு. தஞ்சாவூர் மாநிலத்தில் பிறந்த இவர், கடந்த 1996ஆம் ஆண்டு AdventNet என்ற சாப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம்தான் கடந்த 2019ஆம் ஆண்டு Zoho Corp என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. போர்ஸ் நாளிதழ் கணக்கின்படி நாட்டின் 59ஆவது பெரும் பணக்காரர் இவர்.

English summary
Pattimandram fame Solomon Pappaiah and 10 others awarded with Padma awards
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X