டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மானமுள்ள யாரும் மோடி அரசின் கீழ் பணியாற்ற முடியாது.. ப.சிதம்பரம் தாக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: மானமுள்ள யாரும் இந்த ஆட்சியின் கீழ் பணியாற்ற மாட்டார்கள் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நெருக்குதல் மற்றும் மோதல் போக்கின் காரணமாக உர்ஜித் படேல் அதிரடியாக தனது ஆளுநர் பதவியை விட்டு விலகி விட்டார். சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அவர் கூறியிருந்தாலும் கூட அவரது விலகலுக்கான காரணம் உலகம் அறிந்தது.

உர்ஜித் படேல் விலகல் தொடர்பாக பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் இதுதொடர்பாக ப.சிதம்பரம் ட்வீட்டுகள் போட்டுள்ளார்.

வருத்தப்படுகிறேன்

உர்ஜித் படேலின் ராஜினாமாவால் ஆச்சரியம் வரவில்லை. வருத்தமே ஏற்பட்டது. சுயமரியாதை உள்ளவர்களால் இப்படிப்பட்ட சூழலில் பணியாற்ற முடியாது.

நவம்பர் 19லேயே விலகியிருக்கலாம்

நவம்பர் 19ம் தேதியே படேல் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதை அவர் தவற விட்டு விட்டார்.

அடுத்த அவமானம் வருவதற்கு முன்பு

அரசு தனது அடியொற்றி நடக்கும் என உர்ஜித் படேல் நினைத்திருந்தால் அது தவறு. அரசு அதைச் செய்யாது என எனக்குத் தெரியும். அடுத்த அவமானம் வருவதற்கு முன்பு அவர் விலகியது நல்லது.

போர்டு கம்பெனியாக மாறப் போகுது

ரிசர்வ் வங்கியை ஒரு போர்டு கம்பெனியாக மாற்றுவதே அரசின் திட்டம். அரசு அதைத் திட்டமிட்டு செய்கிறது சரியாக செய்கிறது.

நிதியை அபகரிக்கப் போகிறது

ரிசர்வ் வங்கியின் பணத்தை மொத்தமாக கையகப்படுத்துவதே அரசின் அடுத்த திட்டமாக இருக்கும். இதை வைத்து நிதிப் பற்றாக்குறையை அது சரி செய்யும். மேலும் தேர்தல் ஆண்டின் செலவுக்கும் இதை அது பயன்படுத்தப் போகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

English summary
Former Union finance minister P Chidambaram has slammed PM Modi govt for Urjit Patel resignation fiasco.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X