டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெகாசஸ் உளவு செயலி விவகாரம்.. நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை.. உச்ச நீதிமன்றத்தை நாடிய எம்பி

Google Oneindia Tamil News

டெல்லி : இஸ்ரேலிய உளவு செயலியான, பெகாசஸைப் பயன்படுத்தி சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியலமைப்புச் செயற்பாட்டாளர்கள் மீது மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் ராஜ்யசபா எம்பி ஜான் பிரிட்டாஸ் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டியது கட்டாயம் என்றும் எம்பி ஜான் பிரிட்டாஸ் கூறினார்.

 pegasus issue: Rajya Sabha MP John Brittas moves Supreme Court seeking SIT probe

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. யான . பிரிட்டாஸ், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் " இஸ்ரேலிய உளவு செயலியான, பெகாசஸைப் பயன்படுத்தி உளவு பார்த்தது தனியுரிமைக்கு எதிரானது. உண்மையில் குடிமக்கள் மீதான "இணைய தாக்குதல்" ஆகும். பெகாசஸை தனியார் ஸ்மார்ட்போன்களில் "ஹேக்" செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு "ஆயுதம்" என்று அவர் மனுவில் குறிப்பிட்டார்.

பெகாசஸைப் பயன்படுத்தி சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியலமைப்புச் செயற்பாட்டாளர்கள் மீது மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் என்றும் எம்பி ஜான் பிரிட்டாஸ் வலியுறுத்தினார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெகாசஸ் மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.இதுகுறித்து மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் லோக்சபாவில் கூறும் போத. யாருடைய செல்போனையும் சட்டவிரோதமாக கண்காணிப்பது என்பது இந்தியாவில் சாத்தியம் இல்லை. இதனை ஆய்வு செய்து, சட்டவிரோத கண்காணிப்பு நடக்காமல் தடுக்கும் அளவுக்கு போதுமான செயல் திட்டத்தை நாம் வைத்துள்ளோம்.

Recommended Video

    How does the Pegasus spyware hack into someones phone?| Explained

    இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் யாரையும் மத்திய அரசு உளவு பார்க்கவில்லை.நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு ஒரு இணையதளத்தில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. பெரும் குற்றச்சாட்டுக்களை கூறி வெளியிடப்பட் டுள்ள இந்த செய்தி, தற்செயலானது அல்ல என்று நான் கருதுகிறேன். குறிப்பிட்ட நபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுவது எந்த ஆதாரமும் இல்லாதது. இதில் துளியும் உண்மையும் இல்லை என்றார்.

    English summary
    Rajya Sabha member John Brittas has moved the Supreme Court for a court-monitored investigation into allegations of snooping on activists, politicians, journalists and constitutional functionaries using the Israeli spyware, Pegasu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X