டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன செஞ்சு வச்சு இருக்கீங்க.. மக்கள் அரசை பார்த்து பயப்படுறாங்க..பிரஸ் மீட்டில் கொதித்த ப.சி!

இந்தியாவில் எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள், மக்கள் இந்த அரசை பார்த்து பயப்படுகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Govt turned out to be incompetent manager of economy P Chidambaram

    டெல்லி: இந்தியாவில் எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள், மக்கள் இந்த அரசை பார்த்து பயப்படுகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டு இருக்கிறார்.

    இன்று டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்தும், சமூக பிரச்சனைகள் குறித்தும் அவர் பேட்டி அளித்தார்.

    பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு ப. சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    நாட்டை சீரழித்துவிட்டார்கள்.. கடவுள்தான் நம்மை காக்க வேண்டும்.. ப. சிதம்பரம் பரபரப்பு பேட்டி! நாட்டை சீரழித்துவிட்டார்கள்.. கடவுள்தான் நம்மை காக்க வேண்டும்.. ப. சிதம்பரம் பரபரப்பு பேட்டி!

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது பேட்டியில், காஷ்மீர் மக்கள் குறித்து நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் அவர்களுக்காக வேண்டிக்கொண்டு இருக்கிறேன். திமிர்த்தனமாக எடுக்கப்பட்ட முடிவுதான் காஷ்மீர் பிரிவினை. 75 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை பாஜக பறித்துள்ளது.

    காஷ்மீர் எப்படி

    காஷ்மீர் எப்படி

    நான் வெளியே வந்ததும் அவர்களை பற்றித்தான் நினைத்து பார்த்தேன். அவர்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டு இருக்கிறது. நமக்கு சுதந்திரம் தேவை: நாம் அதற்கு போராட வேண்டும்.நான் இப்போதுதான் வலிமையாக உணர்கிறேன்.

    மோசமான சீர்கேடு

    மோசமான சீர்கேடு

    பொருளாதார சீர்கேடு திறமையின்மையை காட்டுகிறது. காஷ்மீர் பிரச்சனை உங்கள் திமிர்த்தனத்தை காட்டுகிறது. ஜேஎன்யூ விவகாரத்தில் மாணவர்களின் நிலைப்பாடு சரியானது. ஜேஎன்யூ மாணவர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்.

    படிப்புதான் முக்கியம்

    படிப்புதான் முக்கியம்

    அவர்கள் தங்கள் படிப்பிற்குத்தான் பணம் கேட்கிறார்கள். எங்களுக்கு பொருளாதாரம் தெரிகிறது என்றுதான் எங்களை பழி வாங்குகிறார்கள்.பொருளாதாரம் தெரிந்தவர்களை அரசு ஒடுக்கி வருகிறது. நாங்கள் குரல் கொடுக்கிறோம் என்று அவர்களுக்கு அச்சம்.இந்தியாவில் எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

    எல்லா துறையும்

    எல்லா துறையும்

    எல்லா துறையும் அரசை பார்த்து பயந்து வருகிறது.பொருளாதார சீர்குலைவை சரி செய்ய முடியும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்: அவர்களுக்கு செய்ய தெரியாது. நாங்கள் ஐடியா கொடுத்தாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள், என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Inx Media Case: People and every department are in fear of the government says P Chidambaram .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X