டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கை தட்டல், சைரன் ஒலி, தட்டில் அடித்து சத்தம்.. மருத்துவ ஊழியர்களுக்காக மாஸ் காட்டிய இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று மருத்துவ ஊழியர்கள் சேவையை பாராட்டும் வகையில் ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக கை தட்டினர்.

Recommended Video

    மருத்துவ ஊழியர்களுக்காக கைதட்டி ராயல் சல்யூட் !

    கடந்த வியாழக்கிழமை, இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இந்த சுய ஊரடங்கு உத்தரவு அவசியம் என்று வலியுறுத்தினார்.

    People come out on their balconies to clap

    மேலும், மாலை 5 மணிக்கு ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு பால்கனி அல்லது ஜன்னலோரம் அல்லது வாசலிலாவது வந்து நின்று கை தட்ட வேண்டும், அல்லது சைரன் ஒலிக்க வேண்டும், அல்லது விசில் அடிக்க வேண்டும் என்பதுபோல கேட்டுக்கொண்டார்.

    அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க, மக்கள் தங்கள் மொட்டை மாடிகளிலும் பால்கனிகளிலும் நின்று கைதட்டியும், பாத்திரங்களை அடித்தும், ஆரவாரம் செய்தனர். டேராடூன் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ இது.

    டெல்லி, ஜும்மா மசூதிக்கு வெளியே மக்கள் தேசிய கொடியை அசைத்து மருத்துவ சேவைகளை வழங்குபவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

    மருத்துவ சேவைகளை வழங்குவோருக்கு நன்றி தெரிவிக்க மக்கள் கைதட்டியதோடு, பாத்திரங்களை அடித்தும் ஒலி எழுப்பினர், விதவிதமான மணிகள் மூலமும் ஒலி எழுப்பினர். இது பஞ்சாப் மாநிலம். அமிர்தசரஸ் காட்சிகள்.


    மும்பை குடியிருப்பு ஒன்றில், மக்கள் தேசியக் கொடியுடன், கைதட்டியும், இந்தியாவை வாழ்த்தியும் கோஷமிட்டனர்

    இன்னும், தீயணைப்பு படை வீரர்கள், வாகனங்களின் சைரனை ஒலிக்க விட்டு தங்கள் ஆதரவை கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.

    English summary
    People come out on their balconies to clap, clang utensils and ring bells to express their gratitude to those providing essential services.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X