டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்திரமேரூரில் மக்கள் சபை... புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மோடி

உத்திரமேரூர் கல்வெட்டில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றி உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மகா சபை நடந்துள்ளது என்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் பே

Google Oneindia Tamil News

டெல்லி: சென்னைக்கு அருகே உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுக்களில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மகா சபை நடந்துள்ளது. மக்கள் சபை நடந்தது பற்றி கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் ரூ.971 கோடி மதிப்பில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது. மொத்தம் 4 மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமர முடியும். இரு அவை கூட்டத்தொடரின் போது 1,224 பேர் வரை அமரவைக்கப்பட்டு அவை நிகழ்வை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கோண வடிவில் கட்டப்படும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம், நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றம் செயல்பாட்டுக்கு வந்ததும், பழைய நாடாளுமன்ற கட்டடம், நாட்டின் பெருமைமிகு தொல்பொருள் சொத்தாக பராமரிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மோடி பங்கேற்கும் ஆன்லைன் பாரதி விழா... ரஜினி பங்கேற்க நல்லி குப்புசாமி செட்டியார் நேரில் அழைப்புமோடி பங்கேற்கும் ஆன்லைன் பாரதி விழா... ரஜினி பங்கேற்க நல்லி குப்புசாமி செட்டியார் நேரில் அழைப்பு

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு, பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி, பூமி பூஜையை நடத்தி வைத்தார். அதற்கு பிறகு, சர்வ தர்ம பிரார்த்தனா நடைபெற்றது. விழாவில் பேசிய பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான சாட்சியாக திகழும் என்றார். தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் பொதுமக்களுக்கு சிரமம் உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசெளகரியத்தை உணர்ந்தனர்.

ஜனநாயகத்தின் தாய் இந்தியா

ஜனநாயகத்தின் தாய் இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்கள் தாராளமாக வந்து செல்லலாம். இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்று மிகப்பெரிய மைல்கல் என்று கூறினார். ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. வாக்குப்பதிவு மற்றும் அதிகாரப் பகிர்வுக்காக மட்டுமே பல நாடுகளில் ஜனநாயகம் உள்ளது.

உத்திரமேரூர் மக்கள் சபை

உத்திரமேரூர் மக்கள் சபை

சென்னைக்கு அருகே உத்திரமேரூரில் நமக்கு வரலாற்று சான்று கிடைத்துள்ளது. பஞ்சாயத்து தேர்தல் நடந்தததற்கான ஆதாரங்கள் உத்திரமேரூரில் கிடைத்துள்ளன. மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றியும், உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அங்கு மகா சபை நடந்துள்ளது. மக்கள் சபை நடந்தது பற்றி கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது என்றும் பெருமிதத்துடன் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஜனநாயகம்

ஜனநாயகம்

இந்தியாவில் மக்களின் வாழ்வுக்கு வழியாகவும், நாட்டின் ஆன்மாவாகவும் ஜனநாயகம் விளங்குகிறது. ஜனநாயகம் என்பது இந்தியாவில் ஒரு கலாச்சாரம். ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை மதிப்பு, ஒரு வாழ்க்கை முறை மற்றும் தேசத்தின் ஆன்மா. இந்திய ஜனநாயகம் என்பது பல நூற்றாண்டு அனுபவத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

சுயசார்பு இந்தியா

சுயசார்பு இந்தியா

சுய சார்பு இந்தியா திட்டத்தின் புதிய அத்தியாயமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திகழும் என்றும் மோடி தெரிவித்தார். இந்த சமயத்தில் இந்தியாதான் முதலில் என்ற உறுதிமொழியை நாம் எடுக்க வேண்டும். நமது முடிவுகள் தேசத்தை வலிமையாக்க வேண்டும்.

2047ல் இந்தியா எப்படி இருக்கும்

2047ல் இந்தியா எப்படி இருக்கும்

நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள், சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டில் அதாவது 2047ஆம் ஆண்டில் இந்தியாவை எவ்வாறு பார்க்க விரும்புகிறோம் என்பதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Modi has said that the Uttiramerur Inscription is about the election of people's representatives. Speaking at the groundbreaking ceremony of the new parliament in Delhi, Modi said that the Maha Sabha had taken place there a thousand years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X