டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் ஜனாதிபதி கலாம் ஜெயந்தி... ட்விட்டரில் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரதமர், அமைச்சர்கள்

ஏவுகணை நாயகன், மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. டாக்டர் அப்துல் கலாம் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு அவர் அளித்த அழியாத பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Peoples President Kalam Jayanti ... Prime Minister, Ministers sharing memories on Twitter

கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், டாக்டர் அப்துல் கலாம் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு அவர் அளித்த அழியாத பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்காது. விஞ்ஞானியாகவும், இந்திய ஜனாதிபதியாகவும் அவரது வாழ்க்கை பயணம் பல லட்சக்கணக்கானவர்களுக்கு பலத்தை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய மற்றும் வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்காக, நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக கலாம் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அவர் தொடர்ந்து வரும் நம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

உள்துறை உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரும், இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணை திட்டங்களை கட்டமைத்தவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எப்போதும் வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பியவர் என்று குறிப்பிட்டுள்ளார். அறிவியல் மற்றும் கல்வித் துறையில் அவரது பங்களிப்பு என்றும் உத்வேகம் அளிப்பதாக உள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனது ட்விட்டர் பதிவில், முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்குவதாகவும், தனது விசாலமான பார்வை மற்றும் மனிதநேயத்திற்காக பணியாற்றி உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்திய மக்கள் ஜனாதிபதியாக அவர் நினைவில் நிற்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Today marks the birthday of Dr. Abdul Kalam, the People's President, the Missile Man, the country's foremost scientist and the guide of students. Prime Minister Modi has posted on his Twitter page that the country will never forget his indelible contribution to the development of the country during this time of paying tribute to Dr Abdul Kalam Jayanti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X