டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்டம்.. மோடி, அமித் ஷா விளக்கிவிட்டனர்.. கவலை வேண்டாம்.. முதல்வர் பழனிசாமி பேட்டி!

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கிவிட்டனர், அதனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கிவிட்டனர், அதனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து முதல்முறை முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இரண்டு அவைகளிலும் அதிமுக ஆதரவாக வாக்களித்தது. லோக்சபாவில் ஒரு அதிமுக எம்பியும், ராஜ்ய சபாவில் 11 அதிமுக எம்பிக்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதுக்கு பேரு சவாலா? நாங்க ஏன் பாகிஸ்தானியருக்கு குடியுரிமை தரணும்.. மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி! இதுக்கு பேரு சவாலா? நாங்க ஏன் பாகிஸ்தானியருக்கு குடியுரிமை தரணும்.. மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி!

முதல் பேட்டி

முதல் பேட்டி

இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து முதல்முறை முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதில், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பிரதமர் மோடி விளக்கிவிட்டார், அதனால் அதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை . குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை.இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த ம‌த‌த்தினருக்கும் பாதிப்பு இல்லை. இதனால் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பாதிக்காத வண்ணம் செயல்படுவோம், இலங்கை தமிழர்களுக்கு அதிமுக எப்போதும் நன்மை செய்து வருகிறது. தமிழக அரசு எப்போதும் அவர்களுக்கு துணை நிற்கும்.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

இந்தியாவில் வாழும் இந்தியர்கள் இந்த சட்டத்தால் பாதிக்கபட மாட்டார்கள்: யாரும் கவலைப்பட வேண்டாம். குடியுரிமை சட்டம் குறித்து அமித் ஷா தெளிவாக விளக்கிவிட்டார். இந்த சட்டம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார்.

ஸ்டாலின் எப்படி

ஸ்டாலின் எப்படி

திமுக தலைவர் ஸ்டாலின் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறார்.கொறடா உத்தரவின்படி தான் அதிமுக எம்பிக்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.இந்த சட்டம் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், என்று முதல்வர் பழனிசாமி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
People shouldn't worry about Citizenship Amendment Act says TN CM Edappadi Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X