டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊழல், பயங்கரவாதத்தைவிட வேலைவாய்ப்பின்மைதான் மக்களின் முதன்மை பிரச்சனை: ஐ.ஏ.என்.எஸ். சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் ஊழல், பயங்கரவாதத்தை விட வேலைவாய்ப்பின்மைதான் மக்களின் பிரதான பிரச்சனை என்கிறது ஐ.ஏ.என்.ஸ்.ஐ- சிவோட்டர் சர்வே.

நாடு முழுவதும் ஐ.ஏ.என்.ஸ்.ஐ- சிவோட்டர் இணைந்து 30,000 பேரிடம் பல்வேறு தலைப்புகளில் கருத்து கணிப்புகளை நடத்தியது. இதில் நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்தும் முன்வைக்கப்பட்டது.

People worried about unemployment, says IANS-C Voter Survey

இதில் கொரோனா வைரஸ் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கம், கொரோனா தடுப்பூசி குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் பிரச்சனைகள், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான மக்களின் கவலை குறைந்திருக்கிறது.

பயங்கரவாத தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு ஆகியவற்றில் பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார் என்பது மக்களின் நம்பிக்கை. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் மீதுதான் மக்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். பொதுவாக பிரதமர் மோடியைவிட மாநில முதல்வர்கள் மீதே மக்கள் அதிருப்தியை சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

நாட்டின் மோசமான 10 முதல்வர்களில் 7 பேர் பாஜக முதல்வர்கள்! நாட்டின் மோசமான 10 முதல்வர்களில் 7 பேர் பாஜக முதல்வர்கள்!

தற்போதைய நிலையில் வறுமை, வேலைவாய்ப்பின்மைதான் தலையாய பிரச்சனையாக எதிர்கொள்வதாகவும் மக்கள் கருத்து கணிப்பில் கூறியுள்ளனர். சிட்டிங் எம்.எல்.ஏக்களைவிட மாநில முதல்வர்கள்தான் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதும் மக்களின் கருத்தாக முன்வைக்கப்பட்டுள்ளது.

English summary
According to the IANS-C Voter Survey,People are worried about unemployment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X