டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் நவம்பர் 5-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 1991 ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் தொடர்பு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிடோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது உச்ச நீதிமன்ற உத்தரவால் ஆயுள் தண்டனையாக மாறியது.

perarivalan seeks suspension of his life sentence: petition accept by supreme court

இந்நிலையில் பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டில் தான் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக பேரறிவாளன் இருக்கிறார். அவர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்த வழக்கில் பேட்டரி வாங்கிக்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில். "பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி தான் வாங்கி கொடுத்தது என்ற குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சி.பி.ஐ. சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் பதில் அளிக்குமாறு சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு ஓராண்டாக விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில் நவம்பர் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

இந்நிலையில் பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு உச்ச நீதிமன்றத்தில் தங்கள் வழக்கை பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது, விசாரிக்க வேண்டும் என நீதிபதி ரமணா அமர்வில் முறையிட்டார். அதனை ஏற்ற நீதிபதி என்.வி.ரமணா, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.

English summary
rajiv gandhi assassination case: perarivalan seeks suspension of his life sentence, petition accept by supreme court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X