டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லிய தாண்டி பஞ்சாப்பு.. அங்கேயும் பெரியார் புகழ் பரவியாச்சு.. குடியுரிமை போராட்டத்தில் அதகளம்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தம் எதிரான போராட்டங்களில் பெரியார் படங்கள் முன்னிலை பிடித்துள்ளன. வட மாநிலங்களிலும் தந்தை பெரியாரின் புகைப்படங்களை பதாகைகளில் தூக்கிப் பிடித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லிக்கு வடக்கே பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிறது சண்டிகர். அங்கே நடந்த போராட்டத்தில் பெரியார், அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்கள் புகைப்படங்களுடன் போராட்டக்காரர்கள் ஊர்வலம் சென்ற போட்டோ வைரலாகி வருகிறது.

Periyar pictures has been using by the anti CAA protesters

இது போட்டோஷாப் செய்யப்பட்டது என பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள். ஆனால், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் போன்றவை மாணவர்கள் மத்தியில் வெகு பிரபலம். எனவே, இது போட்டோ ஷாப் இல்லை என்பது இடதுசாரிகள் கருத்து.

இதை நிரூபிப்பது போல பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மக்களிடையே ஒற்றுமை, மதவேற்றுமையின்மை, அனைவருக்கும் சம உரிமை போன்ற கொள்கைகளை கொண்டவர் பெரியார்.

பற்றி எரியும் மங்களூர்.. எடியூரப்பா விரைந்தார்.. பொருட்கள் வாங்க 3 மணி நேரம் ஊடரங்கு உத்தரவு தளர்வுபற்றி எரியும் மங்களூர்.. எடியூரப்பா விரைந்தார்.. பொருட்கள் வாங்க 3 மணி நேரம் ஊடரங்கு உத்தரவு தளர்வு

எனவே, முஸ்லீம்களை மட்டும் புறக்கணிக்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களில் பெரியார் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.. அது வட இந்தியாவாக இருந்தாலும்.

வட இந்தியாவிலேயே இப்படி என்றால், தமிழகத்தில் கேட்கவா செய்ய வேண்டும். இங்கும் போராட்டக்காரர்கள் பெரியாரை தங்கள் ஆயுதமாகவும், கேடயமாகவும் முன்னிறுத்தி களம் கண்டுள்ளனர்.

எத்தனையோ புத்தகங்களால் வட இந்தியாவிலுள்ள மாணவ, மாணவிகளை பெருமளவுக்கு அடைய முடியாமல் போனாலும், இன்றைய டிஜிட்டல் இந்தியாவில், பெரியாரின் கொள்கைகள் இளைஞர்களை எளிதாக சென்று சேர்ந்துள்ளன. குடியுரிமை சட்ட திருத்தம், அதன் வீச்சுக்கு இன்னும் அதிக உதவி செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

English summary
Periyar pictures has been using by the anti CAA protesters in north India as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X