டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்சிரோலி நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்..உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலியில் நடத்தப்பட்ட நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலுக்கு ,பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கட்சிரோலியில் 16 பேர் கொண்ட கமாண்டோக்கள் குழு ஒன்று போலீஸ் வாகனத்தில் சென்ற போது, அவர்களை குறி வைத்து நக்சல்கள் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். நக்சல்களின் கொடூர தாக்குதலில் சிக்கிய 16 கமாண்டோக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

perpetrators of such violence will not be spared..Modi Tweet

சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வேன் வரும் போது வெடித்ததில், வாகனம் தூக்கிவீசப்பட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கமாண்டோ வீரர்கள் சென்ற வாகனம் மீது நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்.. 16 பேர் பலிகமாண்டோ வீரர்கள் சென்ற வாகனம் மீது நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்.. 16 பேர் பலி

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் மகாராஷ்டிராவின் கட்சிரோலி நகரில் பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்த்தப்பட்ட இழிவான தாக்குதலுக்கு கடுமையாக கண்டனங்களை பதிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாக்குதலில் மரணித்த அனைவருக்கும் வீர வணக்கம். வீர மரணம் அடைந்துள்ள வீரர்களின் உயிர் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இந்த இழிவான தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்கள் எனவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்

English summary
Prime Minister Modi condemns attack on Naxal bomb blasts in Gadchiroli
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X