டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் ஆபத்தா.. தீவிரமாக களம் இறங்கும் பீட்டா!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தடை விதிக்க விலங்குகள் நல அமைப்பான பீட்டா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஜல்லிக்கட்டு இது தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்று. பொங்கல் பண்டிகைதோறும் விவசாயத்துக்கும், விவசாயிக்கும், கதிரவனுக்கும், காளைக்கும் நன்றி நவிலும் தமிழன், தான் தனது உயிரினும் மேலாக போற்றி, வீரம் ஊட்டி வளர்க்கும் காளைகளை, காளையர்கள் அடக்குவது கண்டு குதுகலமடைகிறான்.

PETA all set to oppose Jallikattu again in SC

தமிழகத்தைப் பொறுத்தவரை இது வெறும் விளையாட்டு அல்ல. தமிழர்களின் உணர்வோடு, உயிரோடு கலந்துவிட்ட ஒன்று.

மேலோட்டமாக பார்த்தால் இது விளையாட்டு என்று பார்க்கப்பட்டாலும் இது தமிழனின் கலாச்சாரத்தை போற்றி பாதுகாக்கும் ஒரு அம்சம். இயற்கை விவசாயம் இன்னும் உயிரோடு இருக்க காளைகளை பயன்படுத்தும் ஒரு யுக்தி. இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்று பீட்டா அமைப்பு நீதிமன்றம் சென்று தடை வாங்கியது.

இவ்வளவு பெரிய அவமரியாதையை எந்த தலைவரும் சந்தித்தது இல்லை...மு.க. ஸ்டாலினைத் தவிர! இவ்வளவு பெரிய அவமரியாதையை எந்த தலைவரும் சந்தித்தது இல்லை...மு.க. ஸ்டாலினைத் தவிர!

இதனையடுத்து 2017 ம் ஆண்டு இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் மாநிலம் முழுவதும் வெடித்தது. இதனையடுத்து மத்திய அரசு இதற்காக ஒரு அவசர சட்டம் ஒன்றை இயற்றியது அதன் பிறகு ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை அகன்றது. இப்போது முன்னைவிட இன்னும் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகமெங்கும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாடப் போவதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது , இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது 8 பேர் இறந்துள்ளதாகவும், ஏராளமான வீரர்கள் மற்றும் காளைகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஆய்வு மேற்கொண்டதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. அதில், காளைகளை சுமார் 16 மணி நேரம் வரை வரிசையில் நிற்கவைத்து கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டுப் போட்டியை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

English summary
PETA is gearing up for seeking ban on Jallikattu in the SC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X