டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்சிபி, காங்., சிவசேனா கூட்டணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திடீர் வழக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்.. சஞ்சய் ராவத் அதிரடி அறிவிப்பு

    டெல்லி: மகாராஷ்டிராவில் என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் திடீரென பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க இயலவில்லை. இதனையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    Petition filed against Post Poll alliance of NCP-Shiv Sena- Cong in SC

    தற்போது சிவசேனா, காங்கிரஸ், என்சிபி ஆகியவை இணைந்து புதிய அரசை அமைக்க உள்ளன. இக்கூட்டணியில் முதல்வர் பதவி சிவசேனாவுக்கு தரப்பட்டுள்ளது.

    ஓரிரு நாட்களில் புதிய அரசு அமையக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எஸ்ஐ சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

    Petition filed against Post Poll alliance of NCP-Shiv Sena- Cong in SC

    அதில், மக்கள் விருப்பத்துக்கு எதிராக தேர்தலுக்குப் பின் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கக் கூடாது.

    இது மக்களின் தீர்ப்புக்கு எதிரான என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதம் நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A Maharashtra Resident SI Singh has filed a petition against the post poll alliance of NCP-Shiv Sena- Cong in the Supreme Court on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X