டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாறு காணாத உச்சம்.. ராஜஸ்தானில் பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை!

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ 100 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளார்கள்.

அண்மைக்காலமாக பல இடங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோலுக்கு 27 காசுகளும் டீசலுக்கு 23 காசுகளும் அதிகரித்து இருந்தது.

இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

இது கடந்த மே 4-ஆம் தேதிக்கு பிறகு அதிகரிப்பது 23 ஆவது தடவையாகும். இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ 100-ஐ கடந்துவிட்டது.

மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேசம்

அந்த வகையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, லடாக் ஆகியவற்றில் ரூ 100-க்கு அதிகமாக பெட்ரோல் விற்கப்படுகிறது. இந்த வரிசையில் 7ஆவது மாநிலமாக கர்நாடகாவும் இணைந்துவிட்டது.

டீசல் விலை

டீசல் விலை


அங்கும் பல இடங்களில் பெட்ரோலின் விலை ரூ 100 ஐ எட்டியிருக்கிறது. அந்த மாநிலத்தில் உள்ள பிதர், பெல்லாரி, கொப்பல், சிமோகா, சிக்மகளூர் ஆகிய இடங்களில் பெட்ரோல் விலை ரூ 100 ஐ கடந்துள்ளது.

டீசல் விலை

டீசல் விலை

இதனிடையே ராஜஸ்தானில் டீசல் விலையும் நேற்று ரூ 100- ஐ தொட்டுவிட்டது. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய- பாகிஸ்தான் எல்லை அருகே இருக்கும் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில்தான் நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ 100 ஐ தாண்டியது.

என்ன நிலவரம்

என்ன நிலவரம்

இங்கு பெட்ரோல் விலை சனிக்கிழமை அன்று லிட்டருக்கு ரூ100.06-க்கு விற்பனையானது. ப்ரீமியம் பெட்ரோல் ஏற்கெனவே ரூ 100 ஐ கடந்துவிட்டது. மும்பையில் லிட்டர் பெட்ரோல் ரூ 100-ஆக கடந்த 29 ஆம் தேதி உயர்ந்துள்ளது. மெட்ரோ சிட்டிகளில் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ 94.45 ஆக உயர்ந்துள்ளது.

English summary
Rajasthan: Both Petrol and Diesel prices crisses Rs 100 per litre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X