டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.5, டீசல் மீது ரூ.4 'செஸ்' போட்ட அரசு.. விண்ணை தொடப்போகிறது விலை

Google Oneindia Tamil News

டெல்லி: ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாட்டில் உச்சத்தை தொட்டு விட்ட நிலையில், அவற்றின் மீது கூடுதல் வரி போடப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இது அறிவிப்பின் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையும் மேலும் அதிகரித்து ஷாக் கொடுக்கப் போகிறது என்று எச்சரிக்கிறார்கள் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள்.

கடந்த சில நாட்களாகவே சென்னை உட்பட நாடு முழுக்க பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது.

சென்னை நிலவரம்

சென்னை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 88.82 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனையாகி வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 81.71 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்

நாட்டின் வணிக தலைநகர் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 93 ரூபாய் என்ற அளவுக்கு போய்விட்டது. சில நாட்கள் முன்பு கடலூர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை முதல் முறையாக லிட்டர் 90 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியளித்தது.

செஸ் வரி

செஸ் வரி

இந்த நிலையில்தான் பெட்ரோல், விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் மற்றும் டீசல் மீது 4 ரூபாய் கூடுதல் செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையேற்றம்

பெட்ரோல், டீசல் விலையேற்றம்

இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இனிவரும் காலத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை சந்திக்கும். இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. குறைந்தது நாளை முதல் பெட்ரோல் மீது ரூ.2.5 விலையேற்றம் இருக்க கூடும். டீசல் மீது 4 ரூபாய் விலையேற்றம் இருக்கும் வாய்ப்புள்ளது.

English summary
Budget 2021: The government proposes cess on petrol and diesel, it will lead fuel price price hiking in coming days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X