டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா தேர்தலும்.. ஈரானுடன் ஏற்பட்ட மோதலும்.. எகிற போகிறது பெட்ரோல் டீசல் விலை.. பகீர் பின்னணி!

உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியலில் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற தன்மை காரணமாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியலில் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற தன்மை காரணமாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடுமையான விலை ஏற்றத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தற்போது இந்தியாவில் நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இன்னும் 3 வாரங்களில் இந்தியா தனது புதிய அரசை தேர்வு செய்துவிடும்.

அதேபோல் உலக அரசியலிலும் அடுத்தடுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மிக முக்கியமாக அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் வெளிப்படையான பிரச்சனையும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த போகிறது.

இலங்கை தீவிரவாதி ஹாசீமும் கூட்டாளிகளும் செய்த கொலைகள்.... உண்மையை கக்கிய டிரைவர் 'கபூர்' மாமா!இலங்கை தீவிரவாதி ஹாசீமும் கூட்டாளிகளும் செய்த கொலைகள்.... உண்மையை கக்கிய டிரைவர் 'கபூர்' மாமா!

உலகம் முழுக்க

உலகம் முழுக்க

உலகம் முழுக்க சவுதி தொடங்கி பல எண்ணெய் வள நாடுகளில் தற்போது எண்ணெய் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. மிக முக்கியமாக சில கச்சா எண்ணெய் கிணறுகள் தொடர்ந்து காலியாகி வருவதால் எண்ணெய் விலை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே வருகிறது. உலக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனை காரணமாக எண்ணெய் விலை இன்னும் அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் பிரச்சனை

ஈரான் பிரச்சனை

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்துள்ளது. ஈரானிடம் இருந்துதான் இந்தியா தற்போது 10% எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. இந்த எண்ணெய்யை இந்தியா இனி வாங்காது.

தொடர்ந்து மோசம்

தொடர்ந்து மோசம்

அதேபோல் தொடர்ந்து இந்தியாவின் பண மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70ஐ தாண்டிவிட்டது. பங்குசந்தையில் நிலவும் சிரமற்ற தன்மை காரணமாக தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும் என்கிறார்கள்.

என்ன காரணம்

என்ன காரணம்

எண்ணெய் டீசல் விலை உயர்வுக்கு இந்தியா பின் வரும் வகையில் காரணமாக இருக்கிறது.

  • லோக்சபா தேர்தல் காரணமாக சந்தையில் நிலவும் அச்சம்.
    • போதிய வேலைவாய்ப்பை உருவாக்காத அரசு.
      • இந்தியாவின் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 4% குறைந்தது.
        • அரசின் தவறான பொருளாதார கொள்கை, ஆகியவை பெட்ரோல் டீசல் விலைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இரண்டு தீர்வு

இரண்டு தீர்வு

இந்த பிரச்சனைக்கு இரண்டு தீர்வுகள் மட்டுமே தற்போது இருக்கிறது.

லோக்சபா தேர்தலுக்கு பின் அமையும் அரசின் கொள்கைகளை பொறுத்து பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும்.

அதேபோல் ஈரானிடம் நாம் இழக்கும் எண்ணெய்யை சவுதி போன்ற எண்ணெய் வள நாடுகள் வழங்குவதாக அறிவிக்க வேண்டும்.இது இரண்டும் நடக்கவில்லை என்றால் பெட்ரோல் டீசல் விலை இன்னும் சில நாட்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது.

English summary
Petrol and Diesel Rate may hit new hight due to this change of wind in India and World politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X