டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுத்தம்.. விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை காஸ்ட்லி.. 33 சதவீதம் அதிகரிப்பு.. மிரட்டும் "கங்காநகர்"

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.. விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசலின் விலை 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Recommended Video

    டீசல் ரூ.100-ஐ தாண்டி விற்பனை… அதிர்ச்சியில் வாடகை வாகன ஓட்டுனர்கள்…

    பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கின்றன.. இதே நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கடைபிடித்தும் வருகின்றன. இதனால், அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

    இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

    கடந்த மாதம் 24-ந்தேதி முதல் டீசல் விலையும் அதிகரிக்க துவங்கி விட்டது.. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட விலை உயர்வு, இன்றுவரை ஏறுமுகமாகவே உள்ளது..

     கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    கடந்த மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன... நடந்து முடிந்த தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டன. எனினும் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன.. தொடர்ந்து 4வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 35 காசுகள் உயர்ந்துள்ளன.

     இன்றைய நிலவரம்

    இன்றைய நிலவரம்

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த 7 வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.. இன்றைய நிலவரப்படி, டெல்லியில் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் டர்பைன் எரிபொருள் லிட்டர் 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. ஆனால், இதுவே பெட்ரோல், டீசல் விலை அதைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாகி விட்டது.. விமானத்தை இயக்குவதைவிட பைக் போன்ற டூவீலர்களை ஓட்டுவதுதான் பெரும் சிக்கலாக உள்ளது.. இரு சக்கர வாகனத்தை இயக்குவதற்கான செலவு அதிகமாகவே உயர்ந்துவிட்டது.

     சர்வதேச சந்தை

    சர்வதேச சந்தை

    இந்த 7 வருடங்களில் இல்லாத வகையில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 84.8 டாலராக உள்ளது... ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பு 73.51 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.. அதேபோல, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை... இதில், தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.105.84 ஆகவும், மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.111.77 ஆகவும் உயர்ந்துள்ளது... சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 105 ரூபாய் 95 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

    விற்பனை

    விற்பனை

    மும்பையில் டீசல் லிட்டர் ரூ.102.52 ஆகவும், டெல்லியில் டீசல் விலை லிட்டர் ரூ.94.57 ஆகவும் அதிகரித்துள்ளது... நம் நாட்டிலேயே மிக அதிகமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.117.86-க்கும், டீசல் ஒரு லிட்டா் ரூ.105.95-க்கும் விற்கப்படுகிறது. அதாவது, அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் பெட்ரோல், விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.. 12 மாநிலங்களில், ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகிறது.

    எரிபொருள்

    எரிபொருள்

    விமானங்களுக்கு பயன்படுத்தும் ஏடிஎப் எரிபொருள் விலையைவிட கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலைதான் 33 சதவீதம் அதிகமாக இருக்கிறது. விமானங்களுக்கு பயன்படுத்தும் ஏடிஎப் எரிபொருள் லிட்டர் ரூ.79 ஆக மட்டுமே இருக்கிறது. ஆனால் வாகனங்களுக்கான பெட்ரோல் லிட்டர் ரூ.110க்கும் மேல் சென்றுவிட்டது.

     குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டு வருவதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியிருந்தார்.. பெட்ரோல் விலையில் 33 சதவீதம் வரி மத்திய அரசுக்கு செல்கிறது என்றும், எரிபொருள் மீது அரசு விதித்து வரும் வரி மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு சமம் என்றும் குற்றஞ்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Petrol Diesel cost 30 more than jet fuel and One litre Petrol Rs ரூ.117.86 in Rajasthan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X