டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மக்கள்தான் இந்த அரசுக்கு முடிவு கட்டுவார்கள்".. பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ராகுல் காந்தி கண்டனம்

Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை வைத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இடையில் இரண்டு நாட்கள் உயராமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.

புதிய உச்சம் தொட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை இன்று மேலும் அதிகரித்தது. பெட்ரோல் விலை இன்று 35 பைசா அதிகரித்தது. டீசல் விலையிலும் இன்று 35 பைசா அதிகரித்தது..

அதிமுகவுக்கு எரிச்சல்... குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை போல் - அமைச்சர் பெரியகருப்பன் அதிமுகவுக்கு எரிச்சல்... குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை போல் - அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை

சென்னை

சென்னையில் இன்று பெட்ரோல் 102.01 ரூபாய்க்கும், டீசல் 100.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது டெல்லியில் பெட்ரோல் 104.39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் 93.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை 107.97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 101.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மும்பையில் பெட்ரோல் விலை 110.51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 101.53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கும் பெரு நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 103.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 102.89 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மக்கள் மீது மத்திய அரசின் வரி அழுத்தம் சுமத்தப்படுகிறது. தவறான ஆட்சி முறைகள், கொள்கைகள் காரணமாக மக்கள் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுளள்னர்.

Recommended Video

    வரலாறு காணாத உச்சம் தொட்ட டீசல் விலை: அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    மோசமான மன்னன் தவறான ஆட்சி முறை மூலம் மக்களிடம் அதிக வரி வசூலித்து மக்களை கொடுமைப்படுத்தும் கதைகளை நமக்கு முன்னோர்கள் சொல்லி உள்ளனர். இதை பல கதைகளில் கேட்டு இருக்கிறோம். இதில் எல்லாம் வருத்தத்தில் இருக்கும் மக்கள் வெகுண்டு எழுந்து மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டி இருக்கிறார்கள்.

    கண்டனம்

    கண்டனம்

    இது வரலாற்றில் உலகம் முழுக்கவே நடந்துள்ளது. அதேபோல் மோசமான ஆட்சியை நடத்தும் இந்த அரசுக்கும் இங்கும் மக்கள் முடிவு கட்டுவார்கள், என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்தியாவில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு தற்போது 100 ரூபாயை தாண்டி உள்ளது.

    English summary
    Petrol, diesel price touched all-time high in India: Congress leader Rahul Gandhi condemns union govt tax.'
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X