டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜஸ்தானில் ராக்கெட் வேகத்தில் செல்லும் பெட்ரோல் விலை... ஒரு லிட்டர் 100-ஐ தாண்டியது!

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. டீசல் விலையும் ரூ.90-ஐ நெருங்கி உள்ளது.

Petrol price crosses Rs 100 in Rajasthan

உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை, எண்ணெயின் சுத்திகரிப்பு செலவினங்கள், சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபம், மத்திய மாநில அரசாங்கங்கள் விதிக்கும் கலால் மற்றும் வாட் வரி ஆகியவற்றைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை அமைந்து வருகிறது.

எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி) புதன்கிழமை நிர்ணயம் செய்ததன் அடிப்படையில் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 25 பைசா அதிகரித்து உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இப்போது ரூ .86.30 ஆகவும், மும்பையில் ரூ .93 ஆகவும் உள்ளது.

ஆனால் எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் மாநிலமான ராஜஸ்தானின் பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .93 ஐ தாண்டியுள்ளது. ராஜஸ்தானின் ஸ்ரீகங்கநகரில் பிராண்டட் பெட்ரோலின் விலை ராக்கெட் வேகத்தில் சென்று வருகிறது. அதாவது லிட்டருக்கு ரூ .101 ஐ தாண்டியுள்ளது, அதே நேரத்தில் சாதாரண பெட்ரோல் விலை ரூ .98.40 ஆக உள்ளது. டெல்லியில் பிராண்டட் பெட்ரோல் விலை ரூ .89.10 ஆகவும், மும்பையில் ரூ .95.61 ஆகவும் உள்ளது.

"பாஜகவுக்கு மாற்று".. புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி.. ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு!

டீசல் விலையும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை இப்போது ரூ .76.23 ஆகவும், மும்பையில் ரூ .83 ஐயும் தாண்டியுள்ளது. ராஜஸ்தான் ஜெய்ப்பூரில், ஒரு லிட்டர் டீசல் ரூ .85.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்ரீகங்கநகரில் டீசலின் விலை லிட்டருக்கு ஏறக்குறைய ரூ .90 ஐ தொட்டு விட்டது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

English summary
Rajasthan, petrol and diesel prices are skyrocketing.The price of a liter of petrol has crossed Rs.100. Diesel price is also approaching Rs 90
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X