டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமர் பிறந்த இந்தியாவுக்கா இந்த நிலை.. சு.சாமி நேரடி 'அட்டாக்..' பதறிப்போன பாஜக ஆதரவாளர்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: "ராமர் பிறந்த இந்தியாவுக்கு வந்த நிலைமையை பார்த்தீர்களா.." என்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி நேரடியாக அட்டாக் செய்துள்ளார் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார கொள்கைகள் பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார் சுப்ரமணியன் சுவாமி.

இந்த நிலையில்தான் நேற்று நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ராமர் பிறந்த மண்ணில் இந்த நிலையா

ராமர் பிறந்த மண்ணில் இந்த நிலையா

மறு நாளான இன்று சுப்பிரமணியன் சுவாமி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி அதிரடி போஸ்ட் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ள போஸ்ட் இது தான்: ராமரின் இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாய், சீதையின் நேபாளத்தில் 53 ரூபாய், ராவணனின் இலங்கையில் 51 ரூபாய், என்று மூன்று வரிகளில் மொத்த நிலவரத்தையும் புட்டு புட்டு வைத்துவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி. இவர் கூறிய விலையில் முன்னே பின்னே இருக்கலாம். ஆனால் இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்பதுதான் அவர் சொல்ல வரும் செய்தியின் சாராம்சம்.

ராமாயணம்

ராமாயண இதிகாசத்தின்படி, ராமர் பிறந்தது இந்தியாவில் உள்ள அயோத்தி. சீதை பிறந்த இடம் தற்போது நேபாளம் நாட்டு எல்லைக்குள் இருக்கிறது. இலங்கையை சேர்ந்தவர் ராவணன். எனவே, ராமாயணத்தை அடிப்படையாக வைத்து ராமராஜ்யம் நடக்கும் இடத்தில் தானே, விலைவாசி குறைவாக இருக்க வேண்டும். ஆனால் ராமர் பிறந்த மண்ணில் இத்தனை விலைவாசி ஏற்றம் எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி

பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி

ஏற்கனவே, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில், அவற்றின் மீது பட்ஜெட்டில் புதிதாக செஸ் வரி விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள இந்தப் பதிவு முக்கியத்துவம் தருவதாக அமைந்துள்ளது.

பாஜக ஆதரவாளர்கள்

பாஜக ஆதரவாளர்கள்

அதேநேரம், பாஜக ஆதரவாளர்கள் இந்த பதிவால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் சு.சாமி டுவிட்டர் பதிவின் பின்னூட்டத்தில், நீங்களே இப்படி பேசலாமா என்று குமுற ஆரம்பித்துள்ளனர். அதேநேரம், விலைவாசி உயர்ந்துள்ளதை யாரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP leader Subramanian Swamy says, Petrol rates are very high in Ram's India compare to other neighbour countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X