டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாறி மாறி தாக்கிக் கொண்ட இந்திய - சீன வீரர்கள்.. வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோசமாக தாக்கி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சில புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படாத வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்!

    இந்தியா மற்றும் சீனா எல்லையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்திய படைகள் அங்கு சீனாவை சமாளிக்கும் வகையில் குவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் சீன படைகள் இந்திய எல்லையில் அத்துமீறும் வகையில் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் எல்லையில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த எல்லை பிரச்சனை கடந்த 25 நாட்களாக தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது.

    பாங்கோங்த்சோ ஏரி, தவாங்க், நாதுலா கணவாய், டோக்லாம்.. இந்தியா - சீனா பிரச்சனையின் மைய புள்ளிகள்!பாங்கோங்த்சோ ஏரி, தவாங்க், நாதுலா கணவாய், டோக்லாம்.. இந்தியா - சீனா பிரச்சனையின் மைய புள்ளிகள்!

    ஷாக்கிங்

    ஷாக்கிங்

    இந்த நிலையில் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோசமாக தாக்கி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சில புகைப்படங்களு வெளியாகி உள்ளது. ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படாத வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. முதல் வீடியோ சண்டை லடாக் அருகே பாங்காங் திசோ பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது .

    என்ன தாக்குதல்

    என்ன தாக்குதல்

    பாங்காங் திசோ பகுதியில் சீனாவின் ராணுவ வாகனம் ஒன்று எல்லை மீறி உள்ளே நுழைந்துள்ளதாக இந்த வீடியோவில் காட்சிகள் உள்ளது. அப்போது அங்கே வரும் இந்திய வீரர்கள் சீனா வாகனம் மீது பதில் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்திய எல்லையில் அத்து மீறிய சீனா வாகனம் மீது இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்துவதாக இந்த வீடியோவில் காட்சிகள் உள்ளது.

    என்ன புகைப்படம்

    என்ன புகைப்படம்

    அதேபோல் இன்னொரு சர்ச்சைக்குரிய புகைப்படமும் வெளியாகி உள்ளது. அதில் இந்திய வீரர்களை அதே பகுதியில் சீன படையினர் கற்களை வைத்தும், குச்சிகளை வைத்தும் தாக்கியது போலவும். அதில் இந்திய வீரர்கள் உடல் முழுக்க காயத்துடன் விழுந்து கீழே கிடப்பது போல காட்சிகள் உள்ளது. சீனர்களின் சில இணைய பக்கங்கள் இதை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது . இது இந்திய தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உண்மை என்ன

    உண்மை என்ன

    ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படாத வீடியோ மற்றும் புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் இதேபோல் நிறைய பழைய வீடியோவும் இணையத்தில் உலா வருகிறது. இது இரண்டு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்ப்டுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் அமன் ஆனந்த் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்தியா வீடியோ உறுதி செய்யப்படவில்லை.

    எங்களின் கவனம்

    எங்களின் கவனம்

    இந்த வீடியோ குறித்த செய்திகள் எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது எல்லையில் நிலவும் சூழ்நிலையோடு இந்த வீடியோவை ஒப்பிட்டு பார்ப்பது தவறான விஷயம். தற்போது எல்லையில் எதுவும் சண்டை நடக்கவில்லை. இதுவரை ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு உள்ளது. தேவையான தகவல்களை, பொய்யான விஷயங்களை இணையத்தில் யாரும் பரப்ப வேண்டாம், என்று அமன் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Photos and Video goes viral in social media on the standoff between China and India in border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X