டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தியா-சீனா இடையேயான எல்லையில், கடந்த பல மாதங்களாக இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில், சீனாவின் எல்லைமீறும் முயற்சியை முறியடிக்க முயன்றபோது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இந்த நிலையில், லடாக்கின், சும்மார்-டெம்சோக் என்ற பகுதியில் சீன ராணுவ வீரர் ஒருவர் இந்திய ராணுவத்திடம் பிடிபட்டார்.

ஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி வச்சு கொண்டாடும் ரசிகர்கள்!ஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி வச்சு கொண்டாடும் ரசிகர்கள்!

ராணுவ வீரர்

ராணுவ வீரர்

விசாரணையில் அவர் சீனாவின், மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த (பி.எல்.ஏ) கார்போரல் என்று தெரியவந்தது அவர் பெயர் வாங் யா லாங். கார்போரல் என்பது, இந்திய ராணுவத்தின் நாயக் பணியிடத்திற்கு ஈடானது.

கம்பளி, உணவுகள்

கம்பளி, உணவுகள்

இங்குள்ள கடும் குளிர் நிலை காரணமாக, சீன வீரருக்கு ஆக்ஸிஜன், உணவு மற்றும் உடலை சூடுபடுத்தும் உடைகள் வழங்கப்பட்டன. தேவைப்படும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள நெறிமுறைகளின்படி, பார்மாலிட்டிஸ்களை முடித்த பின்னர் அவர் சீனாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒப்படைப்பு

ஒப்படைப்பு

இந்த நிலையில், கார்போரல் வாங் யா லாங், நேற்று இரவு சுசுல்-மோல்டோ எல்லைப் பகுதியில் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு சீன அதிகாரிகள் வந்து ஆவணங்களை சரி பார்த்து வீரரின் அடையாளத்தை உறுதி செய்து அழைத்துச் சென்றனர்.

தொலைந்து போனாராம்

தொலைந்து போனாராம்

சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டர் முன்னதாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் "அக்டோபர் 18 மாலை சீன-இந்தியா எல்லைப் பகுதிகளில் எங்களின் கார்ப்பரேல் தொலைந்து போனார், உள்ளூர் மாடு மேய்ப்பவர்கள், ஆடு மேய்ப்பவர்கள் உதவியோடு அவர் திரும்ப முற்பட்டார்" என்று கூறப்பட்டது.

English summary
A Chinese army soldier who had strayed across the Line of Actual Control in Ladakh to the Indian side has been handed back to the People’s Liberation Army (PLA), the Indian Army said early on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X