டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உடனே வாபஸ் பெறுங்கள்!" நுபுர் சர்மா பற்றி சுப்ரீம் கோர்ட் கருத்துகளுக்கு.. எதிராக புதிய மனு தாக்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: நுபர் சர்மா குறித்து உச்ச நீதிமன்றம் சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்து இருந்த நிலையில், இது தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Nupur Sharma, Delhi Police-ஐ விளாசும் Supreme Court | Udaipur Tailor *India

    பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபர் சர்மா டிவி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்.

    இது சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது பாஜக கட்சி ரீதியான நடவடிக்கையை எடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்தது.

    ராஜஸ்தானில் நுபுர் சர்மா ஆதரவாளர் படுகொலை- மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்- என்.ஐ.ஏ. விசாரணை! ராஜஸ்தானில் நுபுர் சர்மா ஆதரவாளர் படுகொலை- மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்- என்.ஐ.ஏ. விசாரணை!

     நுபுர் ஷர்மா

    நுபுர் ஷர்மா

    இந்தச் சூழலில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாகப் பல மாநிலங்களில் நுபர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்படி பல்வேறு மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்ட எல்லா வழக்குகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய நுபுர் ஷர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்து இருந்தது.

     உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    நபிகள் நாயகம் குறித்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் அவதூறு கருத்தால் இந்த நாடே பற்றி எரிகிறது; நுபுர் சர்மாவின் அவதூறு கருத்தால்தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்; நுபுர் சர்மா தமது அவதூறு பேச்சுகளுக்காக டிவியில் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார்

     திரும்பப் பெற வேண்டும்

    திரும்பப் பெற வேண்டும்

    இந்நிலையில், நீதிபதி சூர்யா காந்த்தின் கருத்துகளைத் திரும்பப் பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தலைமை நீதிபதியிடம் அஜய் கௌதம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நீதிபதி சூர்யா காந்த்தின் கருத்துகளை என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நுபர் சர்மா வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்றால் இந்த கருத்துகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

     பாதிக்கும்

    பாதிக்கும்

    நீதிபதியின் கருத்துகள் நியாயமான விசாரணையை பாதிக்கலாம் என்றும், நுபுர் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உதய்பூர் படுகொலை தொடர்பாக நீதிபதிகளின் கருத்துக்கள் கொலையை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இது கொலையாளிகளை விடுவிக்க வழிவகுக்கும் என்பதால் இதை வாபஸ் பெற வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக இந்தியா.காம் இணையதளம் தனது செய்தியில் கூறி உள்ளது.

     உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம் நுபர் சர்மா குறித்து மேலும், "ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் இத்தகைய கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது. சில நேரங்களில் அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறார்கள். நுபுர் சர்மா மன்னிப்பு கேட்பது, தமது கருத்துகளை வாபஸ் பெறுவது என்பது எல்லாம் காலம் கடந்த பின்னரானது. நுபுர் சர்மா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நுபுர் சர்மாவை ஏன் போலீசார் கைது செய்யாமல் இருக்கின்றனர். நுபுர் சர்மா டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர்.

    English summary
    A plea in Supreme Court demanding withdrawal of Justice Surya Kant's observations on Nupur Sharma's case: (நுபர் சர்மா குறித்த உச்ச நீதிமன்ற வழக்கிற்கு எதிராக புதிய மனு) All things to know about Nupur Sharma's case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X