டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொறுமையாயிருங்க... எல்லோருக்கும் தடுப்பூசி தருவோம்... உலக நாடுகளுக்கு சீரம் சி.இ.ஓ. வேண்டுகோள்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தடுப்பூசி உற்பத்தியில், மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் தேவைகளுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார்.

Please Be Patient Serum Institute CEO to Waiting For Vaccines

அன்புள்ள நாடுகளே, அரசாங்கங்களே, நீங்கள் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்காக காத்திருக்கும்போது, ​​தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனாவை விரட்ட நாடு முழுவதும் கோவாக்சின் கோவிஷில்டு என்ற 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும், லண்டனைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்துடனும் சேர்ந்து 'கோவிஷீல்ட்' என்ற தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில், மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் தேவைகளுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அன்புள்ள நாடுகளே, அரசாங்கங்களே, நீங்கள் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்காக காத்திருக்கும்போது, ​​தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சீரம் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது. உலகின் பிற பகுதிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய, நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

English summary
Adar Poonawalla, CEO of the Serum Institute, said that in the production of corona vaccine, the needs of India, which has the largest population, are to be given first priority
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X