டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

21 நாட்களுக்கு, யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.. மோடி உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று நாள் இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது, விருந்தினர்களை வீட்டுக்கு அனுமதிக்காதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, கொரோனா காட்டுத் தீ போல வேகமாக பரவி வருகிறது என்று தெரிவித்த அவர், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

Please do not come out of your home, says PM Narendra Modi

அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. மேலும், நரேந்திர மோடி பேசுகையில், அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம்.

மக்கள் இந்த 21 நாட்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும், அல்லது, இந்தியா 21 வருடங்கள் பின்னோக்கி சென்று விடும்.

உங்கள் வீட்டுக்குள் எந்த ஒரு விருந்தினரையும் அனுமதிக்காதீர்கள், நீங்களும் வீட்டைவிட்டு வெளியே செல்லாதீர்கள். இதை நான் உங்களை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக்டவுன்.. மோடி அதிரடி அறிவிப்புஇன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக்டவுன்.. மோடி அதிரடி அறிவிப்பு

வல்லரசு நாடுகளில் கூட இந்த பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே பொருளாதாரம் பாதிக்கப் பட்டாலும் பரவாயில்லை என்பதற்காக 21 நாட்களும் முழு லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. லட்சுமன் ரேகையை யாரும் தாண்டாதீர்கள்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிரமங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

English summary
Please do not come out of your home’, says PM Narendra Modi at his speech on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X