டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டம்.. 9 மாநில முதல்வர்களுக்கு மட்டுமே பேச அனுமதி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நடத்திய மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டது. மற்றவர்கள் எழுத்துப்பூர்வமாக பரிந்துரை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

Recommended Video

    முதல்வர்களுடனான மீட்டிங்கில் மோடி கூறியது என்ன?

    கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. 27 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பரவி உள்ளது நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 2000 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இது இதுவரை இல்லாத அளவு ஆகும். இந்த வேகத்தில் கொரோனா வைரஸ் பரவினால் பெரும் சிக்கலை ஏற்படுத்தம் என்கிற நிலை காணப்படுகிறது.

     PM-CMs meeting: only 9 CMs allowed to speak. Others asked to give suggestions and requests in writing

    நாட்டில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. இந்த சூழலை பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கலாம் அல்லது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கலாமா என்று ஆலோசித்தார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்றார் முதலில் அமித்ஷா மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார்.

    குற்ற உணர்ச்சி வேண்டாம்.. சமரசமும் வேண்டாம்.. மென்மையும் வேண்டாம்... முதல்வர்களிடம் மோடி பேச்சுகுற்ற உணர்ச்சி வேண்டாம்.. சமரசமும் வேண்டாம்.. மென்மையும் வேண்டாம்... முதல்வர்களிடம் மோடி பேச்சு

    இந்த ஆலோசனை கூட்டத்தில் 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம், ஒடீசா, பீகார், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநில முதலவர்கள் மட்டுமே பேசினார்கள். மற்ற மாநில முதல்வர்கள் தங்கள் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக வழங்குமாறு அறிவுறுத்தியது. அதன்படி பரிந்துரைகளை அளித்தனர்.

     PM-CMs meeting: only 9 CMs allowed to speak. Others asked to give suggestions and requests in writing

    ஒடிசா, மேகாலயா, புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்க ஆதரவு தெரிவித்தனர். அனைத்து முதல்வர்களும் ஊரடங்கை ஒரேடியாக தளர்த்துவதை விரும்பவில்லை. எனினும் ஊரடங்கில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக சில தளர்வுகளை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்தனர். நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    English summary
    PM-CMs meeting recording will be released, only 9 CMs allowed to speak. Others asked to give suggestions and requests in writing. These are the 9 CMs: Meghalaya, Mizoram, Puducherry, Uttarakhand, Himachal Pradesh, Odisha, Bihar, Gujarat,and Haryana
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X