டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எக்ஸாம் எழுதாமல் பஞ்சாப் பல்கலைக்கு தப்பிய மோடி.. மாணவர்களே விடாதீங்க.. 4 கேள்வி கேளுங்க- ராகுல்

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் காந்தி பரபரப்பு பிரஸ்மீட்-வீடியோ

    டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்த கேள்வித்தாள் லீக் ஆகியும் நாடாளுமன்றத்துக்கு வராமல் பஞ்சாப் பல்கலைக்கழகத்துக்கு நரேந்திர மோடி தப்பியுள்ளார் என்றும் அங்குள்ள மாணவர்கள் எனது 4 கேள்விகளுக்கு அவரிடம் இருந்து பதில் பெற்றுக் கொடுக்குமாறு ராகுல் காந்தி தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

    ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் சூடு பிடித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி 5 நிமிடம் கூட அதை பற்றி பேசவில்லை என்பது காங்கிரஸ் குற்றச்சாட்டு.

    PM has fled Parliament and Rafale exam: Rahul ups attack

    இந்நிலையில் நேற்று ரபேல் தொடர்பான 4 கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்குமாறும் அதற்கான விடைகளை பார்த்தே சொல்லலாம் என்றும் கூறி டுவிட்டரில் கேள்விகளை ராகுல் பதிவு செய்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி லோக்சபைக்கு வரவில்லை. மாறாக பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மோடி இல்லாதது குறித்தும் ரபேல் குறித்தும் நாடாளுமன்றத்தில் 20 நிமிடங்கள் சரமாரியாக பேசினார்.

    அதிலும் விடாத ராகுல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ரபேல் தேர்வு எழுதாமலும் நாடாளுமன்றத்துக்கு வராமலும் பிரதமர் நரேந்திர மோடி தப்பி விட்டார். அவர் பஞ்சாபில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களுடன் உரையாற்ற சென்றுவிட்டார்.

    நான் அந்த மாணவர்களிடம் வேண்டுகோளை வைக்கிறேன். தயவு செய்து நான் டுவிட்டரில் போஸ்ட் செய்த 4 கேள்விகளை மரியாதையுடன் பிரதமரை கேளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Rahul tweets that PM has fled Parliament & his own open book Rafale exam & is instead lecturing students at Lovely Univ. in Punjab. I request the students there to, respectfully, ask him to please answer the 4 questions posed to him by me.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X