டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ் குறித்த எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம்.. பிரதமர் மோடி அறிவுரை

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் குறித்த எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Recommended Video

    Corona Virus Symptoms | Precautions

    கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 31 பேர் பாதிக்கப்பட்டனர். 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

    PM Modi advises people not to believe rumours on Corona virus

    இந்த நிலையில் சீனாவில் பலி எண்ணிக்கை 3000-ஐ தொட்டுவிட்டது. இதுகுறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. பிரதமரின் மலிவு விலை மருந்து திட்ட பயனாளிகளிடம் வீடியோ கான்பிரன்சிங்கில் பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில் பிரதமரின் மலிவு விலை மருந்து திட்டம் தொடங்கப்பட்ட தினம் என்பது வெறும் திட்டத்தை கொண்டாடுவதற்காக மட்டும் அல்ல. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் லட்சக்கணக்கான இந்தியர்கள், குடும்பத்தினரை இணைக்கும் நாளாகும்.

    கொரோனா வைரஸ் அறிகுறி என்றால் யார் சொல்லும் வதந்திகளையும் நம்பாதீர்கள். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது உள்ளிட்ட என்ன சந்தேகமானாலும் அதை மருத்துவரிடம் மட்டுமே கேட்டு ஆலோசனை பெறுங்கள் என்றார். இந்த திட்டத்தில் பயனடைந்த தீபா ஷா பிரதமருடன் உரையாடிய போது கண்ணீர் சிந்தினார். இதை பார்த்த பிரதமரும் உணர்ச்சிவயப்பட்டார்.

    English summary
    PM Narendra Modi requests people to not believe in hearsay and rumours on what to do and what not to do on Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X