டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ட்ரம்ப் இப்போ பேசவேயில்லையே.. மோடி மூட் சரியில்லைன்னு எப்படி சொன்னார்.. வெளியுறவு அமைச்சகம் வியப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சமீபத்தில் எந்த போன் தொடர்பும் இல்லை என்று இந்திய வெளியுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    மோடி நல்ல மூடில் இல்லை... டிரம்ப் அதிரடி பேட்டி

    மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயினை, கொரோனா தடுப்புக்காக, இந்தியா அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா கோரியபோது அவர்கள் கடைசியாக பேசினர்.

    PM Modi and Trump spoke in April, no interaction on China

    "டிரம்பிற்கும் மோடிக்கும் இடையிலான கடைசி உரையாடல் 2020 ஏப்ரல் 4 அன்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தொடர்பாக இருந்தது." என்கிறது அந்த வட்டாரங்கள்.

    ஆனால், வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த ஜென்டில்மேன். இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகள் இடையே மிகப் பெரிய மோதல் இருக்கிறது. இரண்டு நாடுகளுமே, பலமான ராணுவத்தை கொண்டுள்ளன. ஆனால் எல்லை விவகாரத்தில் இந்தியாவும் சரி, சீனாவும் சரி அதிருப்தியில் இருக்கின்றன.

    "சீன பிரச்சினை பற்றி பேச போன் போட்டேன், மோடி நல்ல மூடில் இல்லை.." ட்ரம்ப் அதிரடி பேட்டி.. என்னாச்சு?

    நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். தற்போது நிலவும் எல்லை விவகாரம் தொடர்பாக ஆலோசித்தேன். ஆனால் மோடி இந்த விவகாரத்தில் நல்ல மூடில் இல்லை. இப்போதும் கூறுகிறேன். அமெரிக்காவின் உதவி கேட்கப்பட்டால், இருநாடுகளிடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்திருந்தார் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    There has been no recent contact between PM Narendra Modi and US President Donald Trump over the ongoing border strife with China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X