டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடு முழுவதும் அக்டோபர் 2 முதல் 'இதை' பயன்படுத்த முடியாது.. பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி : வரும் காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆறாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார். அதன் பின்னர் முப்படை வீரர்களின் அணுவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

PM Modi announced, plastic ban all over India from 2 October 2019

பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். முத்தலாக் தடை மசோதா, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.

முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றி அதன் மூலம் இஸ்லாமியப் பெண்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்தாக பெருமிதம் தெரிவித்தார். உதவித் தொகை மற்றும் ஓய்வூதியங்கள் வழங்குவதன் மூலம், இந்த அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

மைன்ட் வாய்ஸ் மன்னாரு.. ராகுலுக்கு செம தில்லு பாஸ்.. விடுங்கண்ணே நீங்க கூடத்தான் சந்திச்சீங்க! மைன்ட் வாய்ஸ் மன்னாரு.. ராகுலுக்கு செம தில்லு பாஸ்.. விடுங்கண்ணே நீங்க கூடத்தான் சந்திச்சீங்க!

நீர் பற்றாக்குறையைப் போக்க ஜல்சக்தி என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கிச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது உரையில், வரும் காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். பொது மக்கள் அனைவரும் துணிப் பைகளை உபயோகிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரதமர், நாம் பூமி தாயைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ரசாயன பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

English summary
pm Modi independence day important speech: plastic ban all over India from 2 October 2019
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X