டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி வன்முறை.. 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்தார் மோடி.. அமைதி காக்க அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக, 3 நாட்களுக்கு பிறகு, முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடி மௌனம் கலைத்து உள்ளார். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அவர் ட்விட்டர் வழியாக கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே டெல்லியில் கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி இது வரை இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

PM Modi appeals for calm in Delhi via Twitter after 3 days

இது தொடர்பாக, விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் டுவிட்டரில், 2 ஸ்டேடஸ் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:

டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நிலவக் கூடிய சூழ்நிலை தொடர்பாக தீவிரமான ஆய்வு நடத்தி உள்ளேன். காவல்துறையினர் மற்றும் பிற அமைப்புகள் அமைதியை நிலைநாட்டுவதற்கு களத்தில் நிற்கின்றன. அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவை நமது முக்கியமான பண்புகள். எனவே, எனது சகோதர சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதி மற்றும் சகோதரத்துவம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும். முடிந்த அளவு விரைவாக அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது முக்கியமானது. இவ்வாறு பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம், உச்சநீதிமன்றம், மற்றொரு பக்கம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை காவல்துறை மீது கடும் சாட்டையை வீசியுள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இவ்வாறான அழுத்தங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி தற்போது மவுனம் கலைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Had an extensive review on the situation prevailing in various parts of Delhi. Police and other agencies are working on the ground to ensure peace and normalcy. Peace and harmony are central to our ethos. I appeal to my sisters and brothers of Delhi to maintain peace and brotherhood at all times. It is important that there is calm and normalcy is restored at the earliest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X