டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ZOHO நிறுவனத்திற்கு புகழாரம்.. மன் கீ பாத்தில் தமிழக இளைஞர்களை பாராட்டிய பிரதமர் மோடி..ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக இளைஞர்கள் ஆண்ட்ராய்ட் செயலிகளை கண்டுபிடிப்பது மகிழ்ச்சியை தருகிறது பிரதமர் மோடி தனது மன் கீ பாத் உரையில் புகழ்ந்து உள்ளார்.

பிரதமர் மோடி இன்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். மன் கி பாத் நிகழ்ச்சியின் 68வது நிகழ்வில் இன்று மோடி உரையாற்றினார். இதில் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார்.

ஆத்ம நிர்பார் திட்டம் தொடங்கி ஆசிரியர் தினம் வரை பல விஷயங்களை பிரதமர் மோடி இன்று தனது உரையில் பேசினார். தமிழகம் குறித்தும், தமிழக இளைஞர்கள் குறித்தும் பிரதமர் மோடி இதில் பேசினார்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.. மன் கீ பாத் உரையில் புகழ்ந்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.. மன் கீ பாத் உரையில் புகழ்ந்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?

மோடி உரை

மோடி உரை

பிரதமர் மோடி தனது உரையில், இந்திய மக்கள் அதிக திறமை கொண்டவர்கள். நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கும் வலிமை படைத்தவர்கள் இந்தியர்கள். இந்தியர்கள் தற்போது அதிகமாக செயலிகளை உருவாக்கி வருகின்றனர். இந்தியர்களின் சக்திக்கு எல்லையே இல்லை. இந்த மாத தொடக்கத்தில் ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் நிறைய செயலிகள் உருவாக்கப்பட்டது.

செயலி எனக்கு பிடித்தது

செயலி எனக்கு பிடித்தது

பல புதிய செயலிகள் இதில் உருவாக்கப்பட்டது. ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட KutukiKids என்ற செயலி ஒன்று எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. இதன் மூலம் குழந்தைகள் எளிமையாக படிக்க முடியும். கணிதம், அறிவியல் என்று பல விஷயங்களை இதில் எளிதாக குழந்தைகள் பாடங்களை படிக்க முடியும். என்னை இந்த செயலி மிகவும் கவர்ந்து இருந்தது.

எனக்கு பிடித்த செயலி

எனக்கு பிடித்த செயலி

அதேபோல் Step Set Go என்ற செயலியும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. இது நமது நடையை கணக்கில் வைத்து, நமது கலோரியை கணக்கிடும். தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்கள் செயலிகளை கண்டுபிடிப்பது மகிழ்ச்சியை தருகிறது. Zoho நிறுவனத்தின் செயலிகளை மக்கள் இணையத்தில் தேடி படிக்கலாம்.

சிறிய வேலைகள்

சிறிய வேலைகள்

இந்த செயலிகள் குறித்து மக்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் இதன்மூலம் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும். இன்னும் சில நாட்களில் ஆசிரியர் தினம் வருகிறது. செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் நடக்கிறது. ஆசிரியர்களின் புகழை நாம் அன்று நினைவு கூற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

English summary
PM Modi applauds TN youths and Zoho for app production and innovation in his Maan Ki Baat speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X