டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு நாட்டையே​ நம்பிக்கொண்டிருப்பது ஆபத்தானது.. சீனாவுக்கு மறைமுக குட்டு வைத்த மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா-டென்மார்க் இடையே இருதரப்பு உச்சிமாநாட்டின் போது சீனாவை தாக்கும் வகையில் கடுமையாக கருத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார். எந்த ஒரு பொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்த கொரோனா காட்டிவிட்டது என்று சீனாவை மறைமுகமாக சாடினார்.

இந்தியாவில் வளர்ந்து வரும் காற்றாலை ஆற்றல் துறையில் டென்மார்க் நாடு மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்துள்ளது. அத்துடன் இந்தியாவின், வெண்மை புரட்சிக்கும் கைகொடுத்து வருகிறது. இந்தியாவும் டென்மார்க்கும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன, காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட இரு நாடுகளும் இணைந்துள்ளன.

கடந்த சில மாதங்களாக, டென்மார்க் நிறுவனங்களான எல்.எம். விண்ட், ஹால்டோர் டாப்சோ மற்றும் நோவோசைம்ஸ் போன்றவை மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு பங்களிக்கும் வகையில் இந்தியாவில் உற்பத்தி பிரிவுகளை அமைக்க உறுதியளித்துள்ளன.

நல்லாட்சி என மோடி பாராட்டியது யாரை? அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஈபிஎஸ்- ஓபிஎஸ்நல்லாட்சி என மோடி பாராட்டியது யாரை? அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஈபிஎஸ்- ஓபிஎஸ்

குளிர் பதனக்கிடங்கு

குளிர் பதனக்கிடங்கு

மற்றொரு பெரிய டென்மார்க் நிறுவனமான மெர்ஸ்க், இந்தியாவில் உள்ள அனைத்து ஷிப்பிங் கண்டெய்ணர்களிலும் கிட்டத்தட்ட 19 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், டென்மார்க்கின் டான்ஃபோஸ் நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேளாண் விளை பொருட்களுக்கு குளிர் பதனக்கிடங்குகளை அமைப்பத்து வருகிறது.

இந்தியா டென்மார்க் பேச்சு

இந்தியா டென்மார்க் பேச்சு

இந்நிலையில் இந்தியா-டென்மார்க் இடையே இருதரப்பு உச்சிமாநாடு ஆன்லைன் வாயிலாக நடக்கப்போவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது.
இதன் படி பிரதமர் மோடியும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனும் ஆன்லைன் வாயிலாக சந்தித்து பேசினர். கொரோனா காரணமாக இரு தரப்பும் நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை.

ஒரே இடத்தை நம்பக்கூடாது

ஒரே இடத்தை நம்பக்கூடாது

இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்த பிரதமர் மோடி, சீனாவை மறைமுகமாக தாக்கி பேசினார். டென்மாக் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனிடம்,
பேசும் போது எந்த ஒரு பொருள் உற்பத்திக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்த கொரோனா காட்டிவிட்டது என்றார். சீனா தான் உலகிற்க மருந்து உள்பட பல முக்கிய பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்து வந்த நிலையில், திடீரென கொரோனாவால் நிறுத்திக்கொண்டது. இது உலக நாடுகளை கடுமையாக பாதித்தது. இதைத்தான் பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

இணைந்து செயல்படுவோம்

இணைந்து செயல்படுவோம்

சீனாவை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் மற்ற நாடுகளும் உற்பத்தி மற்றும் விநியோகத்தை இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செய்லபட்டு வருவதாகவும், இந்தியாவை போன்ற எண்ணம் கொண்ட மற்ற நாடுகளும் இதில் சேரலாம்." என்றும் டென்மார்க் பிரதமரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மீண்டும் மோதல்

மீண்டும் மோதல்

கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி இப்படி ஒரு கருத்தை வெளிப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய இராணுவத்திற்கும் சீன ராணுவத்துக்கும் இடையில் மீண்டும் குளிர்காலத்தில் மோதல் ஏற்படலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது.

English summary
PM refrained from naming China directly, the PM told his Danish counterpart, Mette Frederiksen, "Covid-19 has shown that dependence of global supply chains on one source is risky."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X