டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிக நாட்கள் பதவியில் இருக்கும் காங்.அல்லாத பிரதமர்.. சுதந்திர இந்தியாவில் சரித்திரம் படைத்தார் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேராத ஒருவர் மிக அதிக நாட்கள் நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார் என்கிற பெருமையுடன் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சரித்திரம் படைத்திருக்கிறார்.

நாட்டின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு மே 26-ந் தேதி பதவியேற்றார். பின்னர் 2-வது முறையாக 2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி பிரதமரானார் மோடி.

PM Modi Becomes Longest Serving Non-Cong PM of India

தேசத்தின் முதல் பிரதமரான நேரு மொத்தம் 17 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். நேருவின் மகள் இந்திரா காந்தி 11 ஆண்டுகாலமும் மன்மோகன்சிங் 10 ஆண்டுகாலௌம் பிரதமராக பதவி வகித்தனர்.

இவர்களுக்கு அடுத்ததாக அதிக காலம் பிரதமர் பதவியை வகித்து வருகிறார் நரேந்திர மோடி. ஆம் ஆகஸ்ட் 13-ந் தேதி வியாழன்று பிரதமர் மோடி பதவி ஏற்று 6 ஆண்டுகள் 79 நாட்கள் நிறைவடைந்தது.,

வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக தமிழர் விக்ரம் குமார் துரைசாமி நியமனம்வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக தமிழர் விக்ரம் குமார் துரைசாமி நியமனம்

இதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. நாட்டில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் பிரதமர்களிலேயே அதிக நாட்கள் இந்த பதவியில் இருந்தவரும் பிரதமர் மோடிதான். அந்த வகையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் சாதனையையும் பிரதமர் மோடி முறியடித்திருக்கிறார். வாஜ்பாய், மொத்தம் 2,268 நாட்கள் இந்த பதவியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi on Thursday became the 4th longest serving Prime Minister of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X