கொரோனா பரவல்.. இந்த இரண்டும் ரொம்ப முக்கியம்.. விட்ற கூடாது... ஆலோசனை கூட்டத்தில் மோடி அறிவுரை
டெல்லி: கொரோனா பரிசோதனை மற்றும் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்படுத்துமாறு இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 1.45 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 1,341 கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால், இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் இதில் பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும். இதற்கு வேறு ஏதும் மாற்று இல்லை என மோடி தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்கள் மூலம் கொரோனா படுக்கைகளை ஏற்படுத்த மோடி அறிவுறுத்தினார். மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தவும் அதன் விநியோகத்தை முறையாக மேற்கொள்ளவும் பிரதமர் அறிவுரை வழங்கினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் சில மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications