டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீர் குறித்த கருத்தா? இனிமே உங்க கூட பேச்சு கிடையாது.. துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படதற்கு எதிராக கடந்த மாதம் ஐநாவில் பேசியதுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி அதிபர் எர்டோகன் இருப்பதால், அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, துருக்கி செல்லும் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம் ஐக்கிய நாடுகளை சபையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவில் செயலை விமர்சித்து துருக்கி அதிபர் எர்டோகனின் பிரச்சனை எழுப்பினார். அத்துடன் பாரீஸில் நடந்த தீவிரவாத நிதித்தடுப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி செயல்பட்டது.

இதன் காரணமாகவே பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் இடம் பெறுவது தடுக்கப்பட்டது. இந்த காரணங்களால் பிரதமர் மோடி அதிருப்தி அடைந்ததோடு இந்த மாத இறுதியில் செல்வதாக இருந்த தனது துருக்கி பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

புகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத... மாமல்லபுரம் பற்றிய பிரதமர் மோடியின் கவிதை இது..புகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத... மாமல்லபுரம் பற்றிய பிரதமர் மோடியின் கவிதை இது..

துருக்கி அதிபர் பேச்சு

துருக்கி அதிபர் பேச்சு

சவுதி அரேபியாவில் இந்த மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாட்டு நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவுதி செல்கிறார். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து துருக்கி தலைநகர் அங்காராவுக்கு செல்ல முடிவு செய்திருந்தார். ஆனால் காஷ்மீர் விஷயத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் ஐநா சபையில் பேசியதும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களால் இந்தியா, துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை விளக்கம்

வெளியுறவுத்துறை விளக்கம்

இந்நிலையில் பிரதமர் மோடி துருக்கி செல்ல திட்டமிடப்பட்டு இருந்ததே தவிர பயணத்தை உறுதி செய்யவில்லை. எனவே பயணத்தை அவர் உறுதி செய்யாத நிலையில் ரத்து செய்துவிட்ட என்று பேசுவதற்கே இடமில்லை என இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜி 20 மாநாடு

ஜி 20 மாநாடு

முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு அன்டாலயா நகரில் ஜி20 நாடுகள் உச்ச மாநாடு நடந்தபோது பிரதமர் மோடி துருக்கி சென்றார். அதன்பின்னர் துருக்கி அதிபர் எர்டோகன் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்தார். அதன்பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒசாகா நகரில் நடந்த ஜி20 மாநாட்டில் துருக்கி அதிபர் எர்டோகனைச் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இருதலைவர்களும் சந்திக்கவில்லை.

துருக்கி குற்றச்சாட்டு

துருக்கி குற்றச்சாட்டு

கடந்த மாதம் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசுகையில், காஷ்மீரில் 80 லட்சம் மக்களை அடைத்து வைத்து இந்திய ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். மேலும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தியா பதிலடி

இந்தியா பதிலடி

துருக்கி அதிபர் எர்டோகனின் பேச்சுக்கு இந்திய அரசு தரப்பில் மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், " காஷ்மீர் குறித்து நன்கு புரிதலோடு துருக்கி அதிபர் பேசணும். காஷ்மீர் குறித்துப் பேசும்முன், அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

கருப்பு பட்டியல்

கருப்பு பட்டியல்

இது ஒருபுறம் எனில், அண்மையில் அத்துடன் பாரீஸில் நடந்த தீவிரவாத நிதித்தடுப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி செயல்பட்டது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் இடம் பெறுவது தடுக்கப்பட்டது. இந்த காரணங்களால் பிரதமர் மோடி அதிருப்தி அடைந்ததோடு இந்த மாத இறுதியில் செல்வதாக இருந்த தனது துருக்கி பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

English summary
pm modi cancelled a two-day official visit to -turkey's Over Erdogan's criticised India’s move on Article 370 in Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X