டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முக்கியமான திருப்புமுனை... தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்குப் பிரதமர் வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி: ஆக்ஸ்போர்ட் மற்றும் பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Recommended Video

    கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி.. அவசரகால பயன்பாடு… பாராட்டும் பிரதமர் மோடி..!

    இந்தியாவிலும் விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு தடுப்பூசி ஒத்திகை நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

    மெக்சிகோவில்... பைசர் தடுப்பூசி போட்ட டாக்டருக்கு உடல்நலக்குறைவு...மருத்துவமனையில் அனுமதி! மெக்சிகோவில்... பைசர் தடுப்பூசி போட்ட டாக்டருக்கு உடல்நலக்குறைவு...மருத்துவமனையில் அனுமதி!

     நிபுணர் குழு பரிந்துரை

    நிபுணர் குழு பரிந்துரை

    இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியளிக்க கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய சிறப்பு நிபுணர் குழு பரிந்துரைத்திருந்தது. அதேபோல ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கும் மத்திய அரசு அனுமதியளிக்கலாம் என்று இந்திய சிறப்பு நிபுணர் குழு நேற்று பரிந்துரைத்தது.

     தடுப்பூசிக்கு அனுமதி

    தடுப்பூசிக்கு அனுமதி

    அதைத்தொடர்ந்து இன்று இவ்விரு கொரோனா தடுப்பூசிகளின் அவரசகால பயன்பாட்டிற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்பு அனுமதி அளித்து. அதன்படி இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் இன்னும் சில நாள்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     மோடி வாழ்த்து

    மோடி வாழ்த்து

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது ட்விட்டரில், "கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனை! கொரோனா இல்லாத ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் பாதையைத் துரிதப்படுத்தும் விதமாக சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வாழ்த்துகள் இந்தியா. கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகளுக்கும் கண்டுபிடிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

     ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும்

    ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும்

    அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை! தற்சார்பு இந்தியா என்ற கனவை நிறைவேற்ற துடிக்கும் நமது விஞ்ஞான சமூகத்தின் ஆர்வத்தையே இது காட்டுகிறது. நமது டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள், விஞ்ஞானிகள், போலீசார், துப்புரவுப் பணியாளர்கள் என கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் நன்றி. பல உயிர்களைக் காப்பாற்றிய அவர்களுக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்றார்

     கோவிஷீல்ட்

    கோவிஷீல்ட்

    ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்தை கோவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்குத் தேவையான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யவும் விநியோகிக்கவும் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

     கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.03 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணிகள் தொடங்கும்போது, நாட்டில் கொரோனா பரவல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    PM Modi Congratulates as Centre approves two COVID vaccine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X