டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 செயற்கைகோள்- பிரதமர் மோடி வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி: வர்த்தக ரீதியிலான முதல் பிரத்யேக பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 திட்டம் வெற்றியடைந்ததற்கு நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இஸ்ரோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், வர்த்தக ரீதியிலான முதல் பிரத்யேக பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 திட்டம் வெற்றியடைந்ததற்கு என்எஸ்ஐஎல் மற்றும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். நாட்டின் விண்வெளி சீர்திருத்தங்களில், இது புது சகாப்தத்தை ஏற்படுத்துகிறது.

PM Modi congratulates NSIL and ISRO on the success launch of PSLV-C51/Amazonia-1 Mission

4 சிறிய செயற்கை கோள்கள் உட்பட, 18 துணை செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன, நமது இளைஞர்களின் ஆற்றல் மற்றும் புதுமையை வெளிகாட்டுகிறது'' என பதிவிட்டுள்ளார்.

PM Modi congratulates NSIL and ISRO on the success launch of PSLV-C51/Amazonia-1 Mission

மேலும் பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் அமேசானியா-1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மற்றொரு ட்விட்டர் பதிவில், பிரேசில் நாட்டின் அமேசானியா-1 செயற்கை கோள் பிஎஸ்எல்வி-சி51 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு வாழ்த்துக்கள்.

PM Modi congratulates NSIL and ISRO on the success launch of PSLV-C51/Amazonia-1 Mission

நமது விண்வெளி ஒத்துழைப்பில், இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். பிரேசில் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

English summary
The Prime Minister Narendra Modi has congratulated NSIL and ISRO on the success of the 1st dedicated commercial launch of PSLV-C51/Amazonia-1 Mission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X