துபாயில் நடைபெறும் உலக பருவநிலை மாநாடு.. அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி.. ஏன் முக்கியம்?
டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
சர்வதேச அளவில் பெட்ரோலிய எரிபொருட்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்து வருகிறது. உலக வெப்பம் அடைவதால், காலநிலை மாற்றம், வரலாறு காணாத வறட்சி, பெருவெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் அழிவுகள் அதிகரிகத்து வருகின்றன. உலகம் வெப்பம் அடைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.

இதனை அடிப்படையாக கொண்டு ஐக்கிய நாடுகள் பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு பிரேசிலில் பருவநிலை தொடர்பான முதல் உச்சி மாநாடு நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பருவ நிலை உச்சி மாநாடு எகிப்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி புறப்பட்டார்: இந்த நிலையில், சி.ஓ.பி 28 எனப்படும் ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடு நாளை தொடங்கி டிசம்பர் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் , இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார்.
டெல்லியில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் பங்கேற்று விட்டு நாளை மாலை இந்தியாவுக்கு திரும்புவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பருவநிலை செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரை நிகழ்த்த உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்பது மட்டும் இன்றி மூன்று உயர்மட்ட கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.
ஏன் முக்கியம்: முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் புறப்படும் முன்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், "பருவ நிலை விவகாரத்தில் இந்தியா எப்போதுமே சொன்னபடியே நடந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன், காடு வளர்ப்பு ஆகிய துறைகளில் நமது சாதனைகள் நமது பூமித்தாயின் மீதான அர்ப்பணிக்கு சான்று ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளர்.
பருவநிலை மாறுபாடு அதிகரித்து வரும் நிலையில், பாரிஸ் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தீவிரமாக செயல்படுத்துவது தொடர்பாக இந்த மாநாட்டில் ஆலோசிக்க உள்ளன. மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி சில நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications