டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதுக்குள்ளயுமா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர் விபரம் இதோ... !!

Google Oneindia Tamil News

டெல்லி:லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி. வரும் 30ந் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் இருக்க, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயண விபரத்தை வெளியிட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்களுக்கு அவர் எந்தெந்த தேதிகளில், எந்தெந்த நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்ற விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வரும் ஜூன் 13ந் தேதி முதல் 15 வரை கிர்கிஸ்தான் நாட்டில் சுற்றுப் பயணம் செய்கிறார். அங்கு நடைபெற உள்ள எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

pm modi foreign visits details released

ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களும் ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஆகஸ்ட் மாதம் இறுதியில் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்யாவிற்கு செல்கிறார். மூன்றாவது வாரம் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். வரும் நவம்பர் 4ந் தேதி பாங்காங் செல்கிறார். அதே மாதம் 11ந் தேதி பிரேசில் நாட்டிற்கு சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறார்.

ஒரு ஆச்சரியம்.. தமிழகத்தில் நோட்டா பெற்ற ஓட்டு எவ்வளவு தெரியுமா? ஒரு ஆச்சரியம்.. தமிழகத்தில் நோட்டா பெற்ற ஓட்டு எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி 55 வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். அதில், சில நாடுகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சுற்றுப் பயணங்களை செய்துள்ளார். இதற்காக, 2,021 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய போயிங் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த விமானங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Union Ministry of External affairs has released Prime Minister Modi's next 6 months foreign visits details today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X