டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி- தகுதியானவர்கள் போட்டுக்கொள்ள அழைப்பு

பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரும் உடனடியாக கோவிட் 19 தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended Video

    கொரோனா வைரஸ் செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி.. தகுதியுடையவர்கள் போட்டுக்கொள்ள அழைப்பு

    உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 3,03,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,46,71,753 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 25,42,534 பேர் உயிரிழந்துள்ளனர்.

    PM Modi gets first dose of Covid-19 vaccine at AIIMS Delhi

    இந்தியாவில் கொரோனாவிற்கு 1,11,12,056 பேர் பாதிக்கப்பட்டாலும் 1,07,84,568 பேர் குணமடைந்துள்ளனர். 157,195 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 99 சதவிகிதம் பேர் மீண்டுள்ளனர்.

    நாடு முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

    PM Modi gets first dose of Covid-19 vaccine at AIIMS Delhi

    பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தனது முதல் டோஸை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்ட மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    60, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி - எப்படி பதிவு செய்வது 60, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி - எப்படி பதிவு செய்வது

    எய்ம்ஸில் COVID-19 தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டேன். COVID-19 க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவாக தடுப்பூசி கண்டுபிடிக்க எவ்வாறு பணியாற்றினர் என்பதை உலகம் அறியும்.

    தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். கோவிட் -19 இல்லாத இந்தியாவை உருவாக்க ஒன்றிணைவோம் என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    English summary
    PM Narendra Modi took his first dose of COVID-19 vaccine at AIIMS Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X