டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்ப பாக். எதிர்ப்பு என்ன ஆச்சு.. சவுதி சல்மானுக்கு பெரும் வரவேற்பு அளித்த மோடி.. வீடியோவை பாருங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    சல்மானுக்கு வரவேற்பு அளித்த பிரதமர் மோடி- வீடியோ

    டெல்லி: இந்தியா வந்த சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி விமானம் நிலையம் வரை சென்று வரவேற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

    சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று இரவுதான் இவர் டெல்லி விமான நிலையம் வந்தார்.

    பாகிஸ்தான் சென்று இருந்த சல்மான், அங்கிருந்து சவுதி தலைநகர் ரியாத் சென்றுவிட்டு பின் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இன்று பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை சல்மான் இந்தியாவில் செய்ய இருக்கிறார்.

     இவ்வளவு கோடியா

    இவ்வளவு கோடியா

    பாகிஸ்தான் சென்ற சவுதி முடி இளவரசர் மிகவும் சிறப்பாக அந்நாட்டில் நடத்தப்பட்டார். அங்கு அவர் மொத்தம் 1.40 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்காக அவர் இந்த ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். அதே சமயம் மிக முக்கியமான ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் அவர் அங்கு செய்தார்.

     என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    இதனால் பிரதமர் மோடிக்கு என்ன பிரச்சனை என்று கேட்கலாம். பாகிஸ்தான் சென்ற சல்மான் உதிர்த்த சில முத்துக்கள்தான் தற்போது பிரச்சனைக்கு காரணம் ஆகியுள்ளது.

    1. நான் சவுதியின் முடி இளவரசர் போல செயல்பட மாட்டேன், சவுதிக்கான பாகிஸ்தான் தூதர் போல செயல்படுவேன்.

    2. என்னால் பாகிஸ்தானுக்கு எந்த நொடியும் ''நோ'' என்று சொல்ல முடியாது.

    3. எனக்கு மிக மிக நெருக்கமான நாடு பாகிஸ்தான்.

    4. பாகிஸ்தானும், சவுதியும் மற்ற எல்லா நாடுகளையும் விட, மிக நெருக்கமான நட்பு நாடுகள், என்று சல்மான் கூறினார்.

    வரவேற்பு

    இந்த நிலையில்தான் இந்தியா வந்த சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி விமானம் நிலையம் வரை சென்று வரவேற்றார். டெல்லி விமான நிலையத்திற்கே விதிகளை மீறி பிரதமர் மோடி நேரடியாக சென்றார். அங்கு சல்மானை கட்டிப்பிடித்து, கை குலுக்கி மிக இணக்கமான வரவேற்பை கொடுத்தார் மோடி.

     கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    மோடி இப்படி வரவேற்றதுதான் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கும் சல்மானுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம். காலிஸ்தான் போராளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவை இந்தியா வந்த போது, மோடி மிக மோசமான நடத்தினார். வரவேற்பு கூட ஜஸ்டினுக்கு மோடி கொடுக்கவில்லை. இந்த நிலையில் சல்மானுக்கு மட்டும் ஏன் இந்த வரவேற்பு என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

     மிக மோசம்

    மிக மோசம்

    அதேபோல், பாகிஸ்தானுடன் பல லட்சம் கோடிக்கும் ஒப்பந்தம் செய்துவிட்டு சல்மான் வந்திருக்கிறார். இப்போதுதான் புல்வாமா சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி சிரித்தபடி ஏன் இவ்வளவு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும், என்று சமூக வலைத்தளங்களில் பல கடுமையான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

    English summary
    Not So Good: PM Modi gives stunning welcome to Saudi MBS, Makes new controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X