டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனிதான் ஆட்டமே.. மோடிக்கு போன் செய்த டிரம்ப்.. 20 நிமிட பேச்சு.. சீனா பற்றி முக்கிய ஆலோசனை!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடிக்கு போன் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா குறித்து முக்கியமான விஷயங்களை பேசியதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Recommended Video

    India மீது தொடங்கப்படும் விசாரணை.. Trump அமைத்த குழு

    இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனையில் அமெரிக்கா தானாக மூக்கை நுழைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். முதலில் இந்திய - சீன பிரச்சனை தொடக்கத்தில், சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

    ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த சமரச கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. அதே போல் சீனாவும் டிரம்பின் இந்த கோரிக்கையை நிராகரித்தது.

    கொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா? முழு விவரம்கொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா? முழு விவரம்

    அழைப்பு

    அழைப்பு

    இந்த நிலையில் சீனாவை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி சீனாவிற்கு எதிராக ஜி7 நாடுகளை ஒன்றாக இணைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. முக்கியமாக ஜி7 நாடுகளுடன் இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய நாடுகளை இணைக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கான அழைப்பை மூன்று நாடுகளுக்கும் டிரம்ப் விடுத்து இருக்கிறார்.

    போன் செய்தார்

    போன் செய்தார்

    இந்த நிலையில் அதிபர் டிரம்ப் இன்று பிரதமர் மோடிக்கு போன் செய்தார். அதில், ஜி7 மாநாட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் வருகை முக்கியமானது. இந்தியா ஜி7 குழுவில் இணைவது புதிய வலிமை அளிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்த போன் கால் மொத்தம் 20 நிமிடம் நீடித்து இருக்கிறது. இதில் பல முக்கியமான விஷயங்களை இரண்டு நாட்டு தலைவர்கள் பேசி உள்ளனர்.

    சீனா குறித்து பேச்சு

    சீனா குறித்து பேச்சு

    பிரதமர் மோடிக்கு போன் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா குறித்து முக்கியமான விஷயங்களை பேசியதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இந்த 20 நிமிட பேச்சில் சீனா குறித்தும் லடாக் பிரச்சனை குறித்தும் பேசி இருக்கிறார்கள். முக்கியமாக சீனாவின் அத்துமீறல் குறித்து இரண்டு நாட்டு தலைவர்கள் பேசி இருக்கிறார்கள். சீனாவிற்கு இது அதிர்ச்சி அளித்துள்ளது.

    சீனா பதில்

    சீனா பதில்

    இதற்கு தற்போது சீனா பதில் அளித்துள்ளது . அதில் இந்த பிரச்சனை என்பது இரண்டு நாட்டு பிரச்சனை. இதில் சீனா மற்றும் இந்தியா மட்டுமே நடவடிக்கைகளை எடுக்க முடியும். அமெரிக்கா போன்ற நாடுகள் இதில் தலையிட கூடாது. மூன்றாவது நாடுகள் இந்த பிரச்சனையில் தலையிட கூடாது . நாங்கள் இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமும் இதை சரி செய்வோம் என்று பெய்ஜிங் கூறி இருக்கிறது.

    இனிதான் ஆட்டமே

    இனிதான் ஆட்டமே

    இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த வருகை சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இனிதான் இந்த பிரச்சனை சூடு பிடிக்கும் என்று கூறுகிறார்கள். சீனா ஏற்கனவே லடாக் பிரச்சனையில் இந்தியாவின் ராஜாங்க நடவடிக்கைளை சமாளிக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஆதரவும் இந்தியாவிற்கு இருப்பதால் சீனா என்ன செய்வது என்று தெரியாமல் குழம்ப தொடங்கி உள்ளது.

    English summary
    PM Modi had a call with Trump and talked about China standoff for 20 minutes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X