டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் சீனப் படைகள்... முப்படைகளை அழைத்த மோடி.. அஜித் தோவல் உடன் அவசர மீட்டிங்.. பரபரப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் பிரதமர் மோடி தற்போது அவசர மீட்டிங் நடத்தி வருகிறார்.

Recommended Video

    India - china issue | இந்திய எல்லையில் போர் ஜெட்களை இறக்கிய சீனா| Oneindia Tamil

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் இரண்டு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தற்போது அறிவிக்கப்படாத பனிப்போர் நடந்து வருகிறது.

    சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியான யுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுதான் பிரச்னைக்கு காரணம் என்கிறார்கள்.

    தமிழகத்தில் 11 நாட்களில் 1000 கோடி.. டாஸ்மாக் மூலம் லாபம் பார்த்த அரசுதமிழகத்தில் 11 நாட்களில் 1000 கோடி.. டாஸ்மாக் மூலம் லாபம் பார்த்த அரசு

    சீன எல்லை

    சீன எல்லை

    இந்த நிலையில் தற்போது லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் பிரதமர் மோடி தற்போது அவசர மீட்டிங் நடத்தி வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்ற தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். பாதுகாப்பு குறித்த முக்கிய கேள்விகளை பிரதமர் மோடி இதில் கேட்டறிந்தார்.

    மீட்டிங் எப்படி

    மீட்டிங் எப்படி

    அதேபோல் இந்த ஆலோசனை கூட்டத்தில் விமான படை தளபதியிடம் பிரதமர் மோடி முக்கியமான கேள்விகளை கேட்டார். ராணுவ தளபதி நரவானே லடாக் எல்லையில் என்ன நிலைமை என்பதை விவரித்தார். இதற்கான புகைப்படங்களை அவர் மோடியிடம் காட்டி விளக்கம் கொடுத்தார். நேற்று சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ராணுவ மேஜர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

    தோல்வியில் முடிந்தது

    தோல்வியில் முடிந்தது

    ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இன்று முப்படைத் தளபதி பிபின் ராவத் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் சீனா லடாக் எல்லையில் என்ன நடக்கிறது என்று விவரங்கள் பகிரப்பட்டது. தற்போது அந்த ஆலோசனையை தொடர்ந்து பிரதமர் மோடி, முப்படை அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடன் ஆலோசனை செய்துள்ளார்.

    சண்டைக்கு காரணம்

    சண்டைக்கு காரணம்

    இதற்கு முன் பாகிஸ்தான் உடன் சண்டை நடந்த போதுதான் இந்தியா இதேபோல் பதற்றத்திற்கு உள்ளானது. இந்தியா பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய போது இதேபோல் முப்படை மீட்டிங் நடந்தது. தற்போது அதேபோல் மீட்டிங் நடந்து வருகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் போர் வெடிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    English summary
    PM Modi holds meeting with NSA Doval and Forces Chief amid China aggression in Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X