டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று இந்தி தினம்.... பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தி தினத்தை முன்னிட்டு ( Hindi Diwas) பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஏற்கப்பட்டது. இதனால் செப்டம்பர் 14-ந் தேதி இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

PM Modi, Home Minister Amit Shah wishes for Hindi Diwas

இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துகள்.. இந்தி மொழி மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்த அனைத்து மொழியியலாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

PM Modi, Home Minister Amit Shah wishes for Hindi Diwas

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்தி தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதில், இந்தியாவின் கலாசாரத்தில் இருந்து அகற்றவே முடியாதது இந்தி மொழி. பல நூற்றாண்டுகளாக இந்தி மொழிதான் இந்தியாவை ஒருங்கிணைக்கிறது என அமித்ஷா பதிவு செய்திருக்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களும் இந்தி கற்க வேண்டும்... ஆசையை பகிர்ந்த எல்.முருகன் அரசுப் பள்ளி மாணவர்களும் இந்தி கற்க வேண்டும்... ஆசையை பகிர்ந்த எல்.முருகன்

English summary
Prime Minister Narendra Modi and Union Home Minister Amit Shah had extend greetings on Hindi Diwas on Sep.14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X