டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'முப்பது கோடி முகமுடையாள்'.. இந்தியாவின் சிறப்பை பாரதியின் கவிதையில் சொன்ன மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவின் சிறப்பை பாரதியின் கவிதையில் சொன்ன மோடி

    டெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று பேசும் போது மகாகவி பாரதியின் பாடலை பாடி நம் நாட்டின் மொழிகளின் சிறப்புகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

    ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரலில் (மன் கி பாத்) நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார்.

    அந்த வகையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மபுத்திரா புஷ்கர திருவிழா பற்றி நாட்டில் அதிகம் பேர் அறிந்திருக்கவில்லை என்ற தெரிவித்தார்.

    அரசியலுக்கு வர வேண்டும் என நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது.. பிரதமர் மோடி பேச்சு அரசியலுக்கு வர வேண்டும் என நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது.. பிரதமர் மோடி பேச்சு

    தாய்மொழி

    தாய்மொழி

    அத்துடன் இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் சிறப்பு குறித்து விரிவாக பேசினார். அப்போது ரங் சமூகம் எப்படி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்களது தாய்மொழியை உயிர்ப்பித்தது என்பதைச் சொல்லும் போது மகாகவியின் முப்பது கோடி முகமுடையாள் என்ற வரிகளை தமிழிலேயே பேசி மேற்கோள் காட்டினார். பின் அதன் பொருளை இந்தியிலும் விளக்கினார்.

    18 மொழிகள்

    18 மொழிகள்

    இது தொடர்பாக அவர் கூறும் போது 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் புலவர் பாரதியார் மொழி குறித்து பாடியுள்ளதாகவும் இந்தியாவிற்கு பல்வேறு முகங்கள் இருந்தாலும், அதற்கு உருவம் ஒன்று மட்டுமே என்றும், 18க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் அதன் எண்ணம் ஒன்று மட்டுமே என்று பாரதியார் கூறியுள்ளதை விவரித்தார்.

    மேற்கோள் காட்டினார்

    மேற்கோள் காட்டினார்

    "முப்பது கோடி முகமுடையாள்
    உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
    இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்
    எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்று தமிழில் பாரதியின் பாடலை பாடியதுடன் அதன் இந்தி மொழிபெயர்ப்பையும் எடுத்துக்கூறினார்.

    அசத்த போகிறார்

    அசத்த போகிறார்

    தமிழின் சிறப்புகளைஅடிக்கடி பேசிவரும் அடுத்த தேர்தலுக்கு வரும் போது தமிழைமுழுயைமாக கற்று பிரச்சாரத்தில் தமிழில் முழுமையாக பேசி ஓட்டுக்கேட்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஏனெனில் தமிழ் மொழி மீது அந்த அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறார் பிரதமர் மோடி

    English summary
    pm modi mentioned bharathiyar's poem 'muppathu kodi mugamudaiyal' in Mann ki Baat:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X